பொகாரோ எஃகு நகரம் | |||||
---|---|---|---|---|---|
![]() | |||||
![]() பொகாரோ எஃகு நகரத் தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | பாலிதிக், பொகாரோ ஸ்டீல் சிட்டி, சார்க்கண்டு இந்தியா 23°39′24″N 86°05′08″E / 23.6568°N 86.0855°E | ||||
ஏற்றம் | 240 மீட்டர்கள் (790 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்கிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா) | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 7 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | நிலையான, தரைத்தளம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயலில் | ||||
நிலையக் குறியீடு | BKSC | ||||
மண்டலம்(கள்) | தென்கிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா) | ||||
கோட்டம்(கள்) | Adra | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1961 | ||||
மின்சாரமயம் | 1986–89 | ||||
|
பொகாரோ எஃகு நகரத் தொடருந்து நிலையம் (Bokaro Steel City railway station)(நிலையக் குறியீடு:- BKSC ) என்பது தென்கிழக்கு இரயில்வேயின் ஆத்ரா பிரிவின் கீழ் கோமோ-முரி மற்றும் அட்ரா-பொகாரோ எஃகு நகரக் கிளைப் பாதையில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின் சார்கண்டு மாநிலத்தில் பொகாரோ மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஜாரியா தங்கச் சுரங்கத்தின் விளிம்பில் அமைந்துள்ளது. இந்நிலையம் பொகாரோ எஃகு நகரம் மற்றும் சுற்றியுள்ள சுரங்க-தொழில்துறை பகுதிக்குச் சேவை செய்கிறது.
இந்த தொடருந்து நிலையம் மற்றும் இதைச் சுற்றியுள்ள பகுதிகள் முன்பு அசாரிபாக் மாவட்டத்தில் உள்ள மராபரி என்று அழைக்கப்பட்டன. சுற்றியுள்ள பகுதிகள் இன்றும் மராபாரி என்று அழைக்கப்படுகின்றன. பொகாரோ எக்கு ஆலையின் கட்டுமானத்துடன், தொடருந்து நிலையம் பொகாரோ எக்கு நகரத் தொடருந்து நிலையம் என மறுபெயரிடப்பட்டது.[1][2]
இப்பகுதியில் முன்னர் அமைக்கப்பட்ட இரயில் பாதைகளில் 1906-இல் திறக்கப்பட்ட கிழக்கிந்திய இரயில்வே நிறுவனத்தின் முக்கிய பாதையில் இது அமைந்துள்ளது. கோமோ மற்றும் பர்ககானா இடையே நிலக்கரி சுரங்கத்திற்காக இந்நிலையம் தொடங்கப்பட்டது.[3] 1927-இல் கோமோ-பர்ககானா பாதை செயல்பாட்டில் வந்தது. வங்காள நாக்பூர் இரயில்வே நாக்பூரிலிருந்து அசன்சோல் வரை பாதையை உருவாக்கி 1891-இல் சரக்கு போக்குவரத்தினைத் தொடங்கியது.[4] இந்த பாதை 1907-இல் கோமோக் வரை பின்னர் நீட்டிக்கப்பட்டது. மொகூடா-சந்திரபுர இணைப்பு[4] 1913-இல் செயல்பாட்டில் வந்தது.
143 கிலோமீட்டர்கள் (89 mi) நீளமான சந்திரபுரா-முரி-ராஞ்சி-ஹாட்டியா பாதை 1957-இல் தொடங்கப்பட்டு 1961-இல் நிறைவடைந்தது.[5]
பொகாரோ எக்கு நகரத் தொடருந்து நிலையத்திலிருந்து நகர மையப்பகுதிக்குப் பயணிக்க 20 நிமிடங்கள் ஆகும். பொகாரோ எக்கு நகர தொடருந்து நிலையம் மற்றும் நகர மையத்திற்கிடையே பயண தூரம் 20 கி.மீ.
பொகாரோ பகுதியில் உள்ள ரயில் பாதைகள் (பொகாரோ எக்கு நகர் உட்பட) 1986-89-இல் மின் மயமாக்கப்பட்டன.[6]
விரைவு தொடருந்து
பயணிகள் ரயில்