பொக்காரோ விமான நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | தனியார் | ||||||||||
இயக்குனர் | செயில் | ||||||||||
சேவை புரிவது | பொக்காரோ | ||||||||||
அமைவிடம் | பொக்காரோ, ஜார்கண்ட் | ||||||||||
உயரம் AMSL | 715 ft / 218 m | ||||||||||
ஆள்கூறுகள் | 23°38′36″N 086°08′56″E / 23.64333°N 86.14889°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
பொக்காரோ விமான நிலையம் (Bokaro Airport) (ஐசிஏஓ: VEBK) இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் பொக்காரோ (ⓘ) நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் தேசிய நெடுஞ்சாலை 23-ன் அருகில் அமைந்துள்ளது. இங்கிருந்து விமான சேவைகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஏர் டெக்கான் நிறுவனம் இங்கிருந்து கொல்கத்தாவிற்கு விமான சேவை வழங்க முடிவெடுத்து ஆரம்ப கட்ட வாய்ப்புகளை ஆய்வு நடத்தியது.[1] பெரிய விமானங்கள் பயன்படுத்தும் வகையில் விமான ஓடுபாதையின் நீளத்தைக் கூடுதலாக 700 அடிகள் அதிகரித்து மொத்தம் 6,000 அடிகளாகும் படியான பரிந்துரை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.[2] இதன் அமைவிடம் 23°38′36″N 086°08′56″E / 23.64333°N 86.14889°E ஆகும்.