பொக்கோ சேனா (P008) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Pokok Sena (P008) Federal Constituency in Kedah | |
![]() பொக்கோக் சேனா மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | பொக்கோ சேனா மாவட்டம்; கோத்தா ஸ்டார் மாவட்டம்; கெடா |
வாக்காளர் தொகுதி | பொக்கோ சேனா தொகுதி |
முக்கிய நகரங்கள் | அலோர் ஸ்டார் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அகமத் யாகயா (Ahmad Yahya) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 114,838[1][2] |
தொகுதி பரப்பளவு | 322 ச.கி.மீ[3] |
இறுதி தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[4] |
பொக்கோ சேனா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pokok Sena; ஆங்கிலம்: Pokok Sena Federal Constituency; சீனம்: 波各先那国会议席) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், பொக்கோ சேனா மாவட்டம் (Pokok Sena District); கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District); ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P008) ஆகும்.[5]
பொக்கோ சேனா தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1995-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பொக்கோ சேனா தொகுதி 53 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[6]
கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District) கெடா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் இந்த மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது. கெடா மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில், பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு வடமேற்கே 116 கி.மீ. தொலைவில், தாய்லாந்து எல்லைக்கு அருகில் அலோர் ஸ்டார் உள்ளது.[7]
கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் வடக்கில் குபாங் பாசு மாவட்டம்; கிழக்கில் பொக்கோ சேனா மாவட்டம்; தென்கிழக்கில் பெண்டாங் மாவட்டம்; தெற்கில் யான் மாவட்டம்; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை எல்லைகளாக உள்ளன.[8]
கோத்தா ஸ்டார் மாவட்டம் 28 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[9]
பொக்கோ சேனா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2022) | |||
---|---|---|---|
மக்களவை | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1994-ஆம் ஆண்டில் பொக்கோ சேனா தொகுதி உருவாக்கப்பட்டது | |||
9-ஆவது | 1995–1999 | வான் அனாபியா (Wan Hanafiah Wan Mat Saman) |
பாரிசான் (அம்னோ) |
10-ஆவது | 1999–2004 | மபுசு உமர் (Mahfuz Omar) |
பாஸ் |
11-ஆவது | 2004–2008 | அப்துல் ரகுமான் இப்ராகிம் (Abdul Rahman Ibrahim) |
பாரிசான் (அம்னோ) |
12-ஆவது | 2008–2013 | மபுசு உமர் (Mahfuz Omar) |
பாஸ் |
13-ஆவது | 2013–2018 | ||
2018 | சுயேச்சை | ||
அமாணா | |||
14-ஆவது | 2018–2022 | பாக்காத்தான் (அமாணா) | |
15-ஆவது | 2022 – தற்போது வரையில் | அகமட் யாகயா (Ahmad Yahaya) |
பெரிக்காத்தான் (பாஸ்) |
பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
114,838 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
88,976 | 76.58% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
87,944 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
209 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
823 | - |
பெரும்பான்மை (Majority) |
31,751 | 36.10% |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் | (%) | |
---|---|---|---|---|
அகமட் யாகயா (Ahmad Yahaya) |
பெரிக்காத்தான் | 52,275 | 59.44% | |
மபுசு உமர் (Mahfuz Omar) |
பாக்காத்தான் | 20,524 | 23.34% | |
நோரான் சாமினி (Noran Zamini Jamaluddin) |
பாரிசான் | 14,523 | 16.51% | |
நொராயினி சாலே (Noraini Md Salleh) |
சபா பாரம்பரிய கட்சி | 622 | 0.71% |
எண். | தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N9 | புக்கிட் லாடா (Bukit Lada) |
சலீம் முகமது (Salim Mahmood) |
பெரிக்காத்தான் (பி.என்) |
N10 | புக்கிட் பினாங்கு (Bukit Pinang) |
வான் ரோமானி வான் சலீம் (Wan Romani Wan Salim) |
பெரிக்காத்தான் (பி.என்) |
N11 | டெர்கா (Derga) |
தான் கோக் இயூ (Tan Kok Yew) |
பாக்காத்தான் (பி.கே.ஆர்) |
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)