பொங்கலோ பொங்கல் | |
---|---|
![]() | |
இயக்கம் | வி. சேகர் |
தயாரிப்பு | செ.கண்ணப்பன்(ஏ.வி.எம்) எஸ்.ஜெயலக்ஷ்மி எஸ்.எஸ்.துரை ராஜு |
கதை | வி. சேகர் |
இசை | தேவா |
நடிப்பு | விக்னேஷ் விவேக் வடிவேலு சார்லி சின்னி ஜெயந்த் சங்கீதா கோவை சரளா இந்து குமரிமுத்து சண்முகசுந்தரம் ஒரு விரல் கிருஷ்ணா ராவ் போண்டா மணி வெண்ணிற ஆடை மூர்த்தி மலேசியா வாசுதேவன் வடிவுக்கரசி தியாகு ராஜேஷ் எம். எல். ஏ. தங்கராஜ் லதா |
ஒளிப்பதிவு | ஜி. ராஜேந்திரன் |
படத்தொகுப்பு | ஏ. பி. மணிவண்ணன் |
வெளியீடு | மே 09, 1997 |
பொங்கலோ பொங்கல் (Pongalo Pongal) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். வி.சேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்னேஷ், வடிவேலு, சின்னி ஜெயந்த், சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
கிராமத்தில் வாழும் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்கள் தங்கள் சுயமுயற்சியால் சொந்தத் தொழில் செய்து முன்னேறுவதை நகைச்சுவை கலந்து சொல்லும் அருமையான திரைச்சித்திரம். உழைப்பின் அருமையையும் எல்லாரும் அரசு வேலையை நம்பிக் காத்திருக்காமல் சுயமாக உழைக்க வேண்டும் என்னும் கருத்தையும் வலியுறுத்தும் படம்.
பொங்கலோ பொங்கல் | |
---|---|
ஒலிச்சுவடு
| |
வெளியீடு | 1997 |
ஒலிப்பதிவு | 1997 |
இசைப் பாணி | திரைப்பாடல்கள் |
நீளம் | 22:19 |
இசைத்தட்டு நிறுவனம் | லக்கி ஆடியோ |
இசைத் தயாரிப்பாளர் | தேவா |
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.
எண் | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "அப்பனுக்கு பாடம் சொன்ன" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | வாலி | 4:34 |
2 | "நம்ம தாய்க்குலந்தான்" | மனோ, கே. எஸ். சித்ரா | 4:21 | |
3 | "பிஎஸ்சி, எம்எஸ்சி" | மனோ, சுரேஷ் பீட்டர்ஸ் | 4:58 | |
4 | "காலம் நமக்குனு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 4:08 | |
5 | "பட்டிக்காட்டு பட்டதாரிகளா" | அனுராதா ஸ்ரீராம், கிருஷ்ணராஜ் | 3:59 |