பொட்டாசியம் அறுபுளோரோகுப்ரேட்டு(III) (Potassium hexafluorocuprate(III)) என்பது K3CuF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பச்சை நிறத்துடன் பாரா காந்தப் பண்பை வெளிப்படுத்தும் ஒரு திண்மப் பொருளாகவும் அறியப்படுகிறது. தாமிர(III) சேர்மத்திற்கு ஒப்பீட்டளவில் ஓர் அரிதான உதாரணமாகவும் கருதப்படுகிறது.[1]
பொட்டாசியம் குளோரைடு மற்றும் குப்ரசு குளோரைடு ஆகியவற்றின் கலவையை புளோரினுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் பொட்டாசியம் அறுபுளோரோகுப்ரேட்டு(III தயாரிக்கப்படுகிறது.:[2]
இச்சேர்மத்தின் பலவிதமான ஒப்புமைகள் அறியப்படுகின்றன.[3] தண்ணீருடன் எளிதில் வினைபுரிந்து, ஆக்சிசன் மற்றும் தாமிர(II) வேதிப்பொருட்களை இது உற்பத்தி செய்கிறது.