பொட்டாசியம் நையோபேட்டு

பொட்டாசியம் நையோபேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் நையோபேட்டு
வேறு பெயர்கள்
நையோபேட்டு, நையோபியம் பொட்டாசியம் ஆக்சைடு, பொட்டாசியம் கூலும்பேட்டு
இனங்காட்டிகள்
12030-85-2
பண்புகள்
KNbO3
வாய்ப்பாட்டு எடை 180.003 கி·மோல்−1
தோற்றம் வெண்மையான சாய்சதுரப் படிகங்கள்
அடர்த்தி 4.640 கி/செ.மீ3
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
3000 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பொட்டாசியம் நையோபேட்டு (Potassium niobate) என்பது KNbO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரோவ்சிகைட்டு அயமின் படிகமான இது நேரியல்சாரா ஒளியியல் குணகப் பண்புகளைப் பெற்றுள்ளது.[1] பொட்டாசியம் நையோபேட்டால் ஆன நானோ கம்பிகள் இசைவிப்பு ஒரியல்பு ஒளியை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. எலிகளுக்கு வாய்வழி கொடுக்கும் போது இதன் உயிர் போக்கும் LD50 அளவு 3000 மி.கி/கி.கி ஆகும்.

பயன்கள்

[தொகு]

பொருள் அறிவியல் ஆய்வுகளில் [2] பொட்டாசியம் நையோபேட்டு சீரொளி அல்லது லேசர்,[3] துளிமம் தொலைப்பெயர்ச்சி,[4] போன்ற பல்வேறு பிரிவுகளிலும் பயன்படுகிறது. மேலும் துகள்ம இணைபொருட்களின் ஒளியியல் பண்புகளை ஆய்வு செய்யவும் பொட்டாசியம் நையோபேட்டு பயன்படுகிறது[5]

மின்னணு நினைவு தேக்கக பயன்பாட்டுடன்[2] கூடுதலாக ஒத்ததிர் இரட்டிப்பு தொழில்நுட்பத்திலும் பொட்டாசியம் நையோபேட்டு பயன்படுத்தப்படுகிறது. இத்தொழில்நுட்பம் {[ஐ.பி.எம். அல்மாடென் ஆய்வு மையம்|ஐ.பி.எம். அல்மாடென் ஆய்வு மையத்தால்]] [3]உருவாக்கப்பட்டதாகும். இதன்மூலம் சிறிய அகச்சிவப்பு லேசர்களை நீலநிற ஒளியாக வெளியிட முடியும். பொட்டாசியம் நையோபேட்டைச் சார்ந்துள்ள, நீலநிற லேசர்களை உற்பத்தி செய்வதற்கான இத்திட்டம் இக்கட்டான தொழில்நுட்ப திட்டமாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Palik, Edward D. (1998). Handbook of Optical Constants of Solids 3. Academic Press. p. 821. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-544423-1. பார்க்கப்பட்ட நாள் 13 December 2012.
  2. 2.0 2.1 "In Science Fields". The Science News-Letter 62 (17): 264–265. 1952-10-25. doi:10.2307/3931381. http://www.jstor.org/stable/3931381. பார்த்த நாள்: 2014-08-20. (subscription required)
  3. 3.0 3.1 Regalado, Antonio (1995-03-31). "Blue-Light Special". Science. New Series 267 (5206): 1920. doi:10.1126/science.267.5206.1920. http://www.jstor.org/stable/2886437. பார்த்த நாள்: 2014-08-20. (subscription required)
  4. Furusawa, A.; J. L. Sørensen; S. L. Braunstein; C. A. Fuchs; H. J. Kimble; E. S. Polzik (1998-10-23). "Unconditional Quantum Teleportation". Science. New Series 282 (5389): 706–709. doi:10.1126/science.282.5389.706. http://www.jstor.org/stable/2899257. பார்த்த நாள்: 2014-08-20. (subscription required)
  5. Lakhtakia, Akhlesh; Tom G. Mackay (2007-02-08). "Electrical Control of the Linear Optical Properties of Particulate Composite Materials". Proceedings: Mathematical, Physical and Engineering Sciences 463 (2078): 583–592. doi:10.1098/rspa.2006.1783. http://www.jstor.org/stable/20209136. பார்த்த நாள்: 2014-08-20. (subscription required)