அகத்தியர் மலை (அசம்புமலை) | |
---|---|
இந்த மலையில் உள்ள 26 மலைச் சிகரங்களில் உயரமான அகத்தியர்மலை 1,600 மீட்டர்கள் (5,200 அடி) | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,868 m (6,129 அடி) |
புடைப்பு | 1,668 m (5,472 அடி) |
ஆள்கூறு | 8°39′N 77°13′E / 8.650°N 77.217°E |
பெயரிடுதல் | |
மொழிபெயர்ப்பு | மருந்து தயாரிப்பாளர் மலை |
பெயரின் மொழி | தமிழ் |
புவியியல் | |
அமைவிடம் | கேரளம் & தமிழ்நாடு |
மூலத் தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் |
அமைப்பியல் வரைபடம் | ![]() |
நிலவியல் | |
பாறையின் வயது | Cenozoic, 100 to 80 mya |
மலையின் வகை | Fault Description |
ஏறுதல் | |
எளிய வழி | trekking via Peppara Wildlife Sanctuary |
பொதிகை மலை | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,866 m (6,122 அடி) |
புடைப்பு | 1,668 m (5,472 அடி) ![]() |
ஆள்கூறு | 8°37′00.09″N 77°14′46.50″E / 8.6166917°N 77.2462500°E |
புவியியல் | |
அமைவிடம் | இந்தியா, திருவனந்தபுரம் மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம் |
மூலத் தொடர் | ஆனை மலை |
பொதிகை மலை (Pothigai) என்பது மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தென்பகுதியில் ஆனைமலைத் தொடாில் அமைந்துள்ளது. இதற்கு அகத்தியர் மலை என்று மற்றொரு பெயரும் உண்டு
பொதிகை மலை கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்திலும், ஒருபகுதி தமிழ்நாடு மாநிலம் திருநெல்வேலி மாவட்டத்திலும் அமைந்துள்ளது. இதன் உயரம் 1,866 மீட்டா்கள் ஆகும். இந்த மலையிலிருந்து தான் தமிழ்நாட்டின் முக்கிய நதியான தாமிரபரணி ஆறு உருவாகிறது.
சங்க காலத்தில் பொதியம் என்றும், பொதியில் என்றும் வழங்கப்பட்ட மலையை இக்காலத்தில் பொதிகைமலை என்றும் கூறுவர்.
சங்ககாலத்தில் வையை என வழங்கப்பட்ட ஆற்றை இக்காலத்தில் வைகை எனவும் வழங்குவது போன்றது இது.
வடக்கில் இமயமலையும், தெற்கில் பொதியமலையும் தமிழர் சென்றுவந்து கண்ட ஓங்கி உயர்ந்த மலைகள். [1]
பொதியமலையில் இருந்துகொண்டு அகத்தியர் தமிழ் வளர்த்ததாகக் கதைகள் கூறுகின்றன. இந்த மலையின் உச்சியில் அகத்தியர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் செல்ல, வாகனங்கள் செல்ல முடியாத அடர் வனத்தின் வழியே, இரண்டு நாள் இரவு, மூன்று நாள் பகல் என்று கடுமையான நடைபயண யாத்திரையை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். 1995 ஆண்டுக்கு முன்வரை திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், காரையாறு அணை, பாணதீர்த்தம் அருவி, பேயாறு உள்ளிட்ட காட்டாறுகளைக் கடந்து, பொதிகைக்குப் பக்தர்கள் சென்று வந்தனர். களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பாதுகாப்பைக் காரணம் காட்டி, இவ்வழியாக பொதிகை மலை செல்வதற்கு, 2002 ஆம் ஆண்டுக்குப் பின் தமிழக வனத்துறை தடை விதித்துவிட்டது. இதனால் மலையின் மறுபக்கத்தில் உள்ள திருவனந்தபுரம் வழியாக பொதிகை யாத்திரை செல்ல, கேரள வனத்துறை அனுமதிக்கிறது. இணையம் மூலம் முன்பதிவு செய்பவர்களிடம், உரிய கட்டணம் பெற்றுக்கொண்டு, பயிற்சி பெற்ற காணிகள் துணையுடன் கேரள வனத்துறை பொதிகைக்கு அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சிவராத்திரி வேளையிலும், அதன்பின், மே மாதத்தில் மட்டும் இப்பயணத்தை கேரள வனத்துறை அனுமதிக்கிறது. தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர் ஓட வேண்டும் என, பொதிகை மலையில் வீற்றிருக்கும் அகத்தியரை வேண்டி, பக்தர்கள் அங்கு சிறப்பு பூசைகள் நடத்துவர்.[18]
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)