பொன் மாணிக்கவேல் (திரைப்படம்)

பொன் மாணிக்கவேல்
இயக்கம்ஏ. சி. முகில் செல்லப்பன்
தயாரிப்புநேமிச்சந்த் ஜெபக்
ஹித்தீஷ் ஜெபக்
கதைA. C. Mugil Chellappan
இசைடி. இமான்
நடிப்புபிரபுதேவா
நிவேதா பெத்துராஜ்
மகேந்திரன்
சுரேஷ் சந்திர மேனன்
ஒளிப்பதிவுகே. ஜி. வெங்கடேஷ்
படத்தொகுப்புடி. சிவானந்தீசுவரன்
கலையகம்ஜெபக் மூவிஸ்
விநியோகம்ஹாட் ஸ்டார்
வெளியீடு19 நவம்பர் 2021 (2021-11-19)
ஓட்டம்133 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பொன் மாணிக்கவேல் (Pon Manickavel) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அதிரடித் திரைப்படமாகும். இதை கண்டேன் பட புகழ் ஏ. சி. முகில் செல்லப்பன் இயக்கியிருந்தார். இப்படத்தில்பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1] படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இது பிரபுதேவாவின் 50வது படமாகும்.[2] படம் 19 நவம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது [3] நடிகரும் இயக்குனருமான மகேந்திரன் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி இறப்பதற்கு முன் அவரது இறுதித் திரைப்படத் தோற்றத்தையும் இப்படம் குறிக்கிறது. படம் விமர்சகர்களிடமிருந்து சாதகமற்ற விமர்சனங்களைப் பெற்றது.[4]

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

பொன் மாணிக்கவேல் படத்தின் முதல் புகைப்பட வெளியீட்டில் பிரபுதேவா காவல் அதிகாரியாக தோற்றமளித்தார்.[5] அவர் முதல்முறையாக காவல் அதிகாரியாக நடிக்கிறார். முதன்முறையாக டி. இமான் பிரபுதேவாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார். மேலும், மதன் கார்க்கி, விவேகா, ஜி.கே.பி, இரஞ்சன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

வெளியீடு

[தொகு]

படம் 21 பிப்ரவரி 2020 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்படும் என்று முதலில் திரைப்பட தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். பின்னர் 6 மார்ச் 2020 வெளியீட்டிற்கு தள்ளப்பட்டது.[6][7] கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக படம் மேலும் ஒத்திவைக்கப்பட்டது.[8] சூலை 2021 இல், திரையரங்கு வெளியீடு ரத்து செய்யப்பட்டதாகவும், அதற்குப் பதிலாக டிஸ்னி+ ஹாட் ஸ்டார் வழியாக படம் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.[9] இறுதியாக இப்படம் 19 நவம்பர் 2021 அன்று வெளியானது.[10]

வரவேற்பு

[தொகு]

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 5க்கு 2 என மதிப்பிட்டு "பொன் மாணிக்கவேல் வழக்கமான காவல் துறை -திரைப்பட வரிசைகளின் ஒரு தொகுப்பு" என்று கூறியது.[11]

பிலிம் கம்பேனியனின் ரஜனி கிருஷ்ணகுமார், "படம் பார்க்க முடியவில்லை. எனவே பொதுமக்களிடையே இது ஏற்படுத்தும் தாக்கம் குறைவாகவே இருக்கும்" என எழுதினார்.[12]

சான்றுகள்

[தொகு]
  1. "Prabhu Deva's next film titled as Pon Manickavel". Behindwoods. 2018-07-18. பார்க்கப்பட்ட நாள் 2018-12-14.
  2. "Prabhu Deva's next film with Deekay to have three heroines: Report".
  3. "Pon Manickavel trailer: Prabhu Deva plays an upright cop in this thriller which will have an OTT premiere on November 19". OTT Play. 10 November 2021.
  4. "Pon Manickavel Movie Review: Prabhudeva can do only so much to save a cliched cop film". இந்தியா டுடே. 19 November 2021.
  5. CR, Sharanya (20 July 2018). "Prabhudeva rocks the cop look in Pon Manickavel". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/prabhudeva-rocks-the-cop-look-in-pon-manickavel/articleshow/65054606.cms. 
  6. Glitz, India (2019-11-21). "Prabhu Deva joins the Pongal race!". IndiaGlitz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.
  7. "Prabhu Deva's 'Pon Manickavel' release pushed again". 8 March 2020.
  8. "Kerala Police thanks Kamal Haasan for his congratulatory message". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2020.
  9. "Pon Manickavel to release on Disney+ Hotstar". Cinema Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.
  10. "Prabhudheva's Pon Manickavel trailer out, film to premiere on November 19". சினிமா எக்ஸ்பிரஸ். 10 November 2021.
  11. "Pon Manickavel Review : ​Pon Manickavel​ is a bundle of cop-movie cliches". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 November 2021. பார்க்கப்பட்ட நாள் 23 November 2021. {{cite web}}: zero width space character in |title= at position 25 (help)
  12. Krishnakumar, Rajani. "Pon Manickavel Movie Review: Prabhu Deva Power-Walks Through An Inept Film About An Incompetent Cop". பார்க்கப்பட்ட நாள் November 24, 2021. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]