பொன்னம்பேட்டை
பொன்னம்பேட்டை பொன்னாபேட்டை | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 12°12′N 75°54′E / 12.2°N 75.9°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | குடகு |
ஏற்றம் | 851 m (2,792 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 6,117 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 571 216 |
தொலைபேசிக் குறியீடு | 08274 |
வாகனப் பதிவு | கேஏ-12 |
பொன்னம்பேட்டை (Ponnampet) என்பது கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். இதற்கு முதலில் செப்புதிரா பொன்னப்பா என்பவரின் நினைவாக பொன்னாப்பேட்டை எனப் பெயரிடப்பட்டது.[1] இது 1821 ஆம் ஆண்டில் குடகு அரசரின் ஆட்சியில் மறைந்த திவான் பெயரில் நிறுவப்பட்டது. இந்த நகரம் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட பகுதி என்று அழைக்கப்பட்டது. பின்னர் அது நகராட்சியாக மாற்றப்பட்டது. இப்போது இது முதல்நிலை கிராம பஞ்சாயத்து என்று அழைக்கப்படுகிறது. பொன்னம்பேட்டை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு வட்டத் தலைமையகமாக இருந்தது.
இது 2017 ஆம் ஆண்டில் சுமார் 16,313 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. முன்பு பெங்களூரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக இருந்த வனவியல் கல்லூரி, தற்போதைய சிமோகா, வேளாண் மற்றும் தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது. கூர்க் தொழில்நுட்ப நிறுவனம் இங்கு அமைந்துள்ளது. குந்தா என்று அழைக்கப்படும் ஒரு மலை நகரமும் இங்கு அமைந்துள்ளது.