பொன்னுமணி | |
---|---|
இயக்கம் | ஆர். வி. உதயகுமார் |
தயாரிப்பு | ஜே. பி. ராஜாரவி ஜெகதீஷ் |
கதை | கோகுல் கிருஷ்ணா (வசனம்) |
திரைக்கதை | ஆர். வி. உதயகுமார் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் சௌந்தர்யா சிவகுமார் |
ஒளிப்பதிவு | அப்துல் ரகுமான் |
படத்தொகுப்பு | பி. எஸ். நாகராஜ் |
கலையகம் | தாய் சக்தி புரொடக்சன்சு |
விநியோகம் | தாய் சக்தி புரொடக்சன்சு |
வெளியீடு | ஏப்ரல் 16, 1993 |
ஓட்டம் | 149 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொன்னுமணி (ஆங்கில மொழி: Ponnumani) என்பது 1993 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். வி. உதயகுமார் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்திக், சௌந்தர்யா, சிவகுமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான இத்திரைப்படம் சிறப்பான வரவேற்பு பெற்ற வெற்றித் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படம், சென்னை, கோவை, மதுரை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படமாகும். இது ஆர். வி. உதயகுமார் - கார்த்திக் கூட்டணியின் இரண்டாவது வெற்றித் திரைப்படமாகும்.
இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் எழுதியவை.
எண் | பாடல் | பாடியவர்(கள்) |
---|---|---|
1 | ஆத்து மேட்டுல | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி |
2 | ஆடிப் பட்டம் | மனோ |
3 | அடியே வஞ்சிக்கொடி | இளையராஜா |
4 | அன்பை சுமந்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
5 | நெஞ்சுக்குள்ளே இன்னாருனு | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி |
6 | நெஞ்சுக்குள்ளே இன்னாருனு (சோகம்) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
7 | சிந்துநதி செம்மீனே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் கார்த்திக் இத்திரைப்படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.