பொன்மலை | |
---|---|
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் | |
![]() பொன்மலை | |
![]() திருச்சிராப்பள்ளியில் பொன்மலை | |
ஆள்கூறுகள்: 10°47′08″N 78°43′24″E / 10.78556°N 78.72333°E | |
நாடு | இந்தியா |
பகுதி | சோழ நாடு |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
மாநகராட்சி | திருச்சிராப்பள்ளி |
அரசு | |
• வகை | கவுன்சிலர் |
• நகரத்தந்தை | எம். அன்பழகன் (திமுக) |
• துணை நகரத்தந்தை | ஜி. திவ்யா |
• மாநகராட்சி ஆணையாளர் | வி. சரவணன், இ.ஆ.ப. |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | எம். பிரதீப் குமார், இ.ஆ.ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 56.75 km2 (21.91 sq mi) |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே.) |
அ.கு.எ. | 620 004 |
தொலைபேசி குறியீடு | 0431 |
வாகனப் பதிவு | TN-81 |
இணையதளம் | www |
பொன்மலை திருச்சிராப்பள்ளியின் நான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இருப்பு வழி குடியிருப்பு மற்றும் இருப்பு வழி பணிமனை அருகில் உள்ளது.[1]
பெரும்பாலான பகுதி பொன்மலை இருப்பு வழி பணிமனை மற்றும் அதன் ஊழியர்களுக்கான குடியிருப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
![]() |
இதன் சுற்றுப்புறங்கள் கல்கண்டார் கோட்டை, கீழக்குறிச்சி, நத்தமாடிப்பட்டி, பொன்மலைபட்டி, கொட்டப்பட்டு, சுப்பிரமணியபுரம், சங்கிலியாண்டபுரம், செந்தநீர்புரம், அம்பிகாபுரம், தங்கேஸ்வரி நகர், முன்னாள் படைத்துறையினர் குடியிருப்பு ஆகும். கோல்டன் ராக் குடிமக்களில் பெரும்பாலானவர்கள் தென்னக இரயில்வே ஊழியர்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் இதன் சந்தை நன்கு அறியப்பட்டதாகும், இது 1926 இல் பிரித்தானிய ஆட்சியின் போது நிறுவப்பட்டது.[2][3][4]
அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் பொன்மலை (GOC), மஞ்சத்திடல் (MCJ) மற்றும் திருச்சிராப்பள்ளி சந்திப்பு (TPJ).
இது இந்திய இரயில்வேக்கு சொந்தமான மாநகரத்தின் பழமையான மருத்துவமனைகளில் ஒன்றான, கோட்ட இருப்பு வழி மருத்துவமனையை கொண்டுள்ளது.