பொன்முடி புதர் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ராகோபோரிடே
|
பேரினம்: | ரோர்செசுடசு
|
இனம்: | ரோ. பொன்முடி
|
இருசொற் பெயரீடு | |
ரோர்செசுடசு பொன்முடி பிஜு & போசுய்ட், 2005 | |
வேறு பெயர்கள் | |
பிலாடசு பொன்முடி பிஜு & போசுய்ட், 2005 |
பொன்முடி புதர் தவளை (Raorchestes ponmudi-ரோர்செசுடசு பொன்முடி) என்பது ராக்கோபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினமாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இந்த பேரினத்தில் உள்ள மற்ற சிற்றினங்களைப் போலவே நேரடி வளர்ச்சியை உள்ளடக்கிய வாழ்க்கை சுழற்சியினைக் கொண்டுள்ளது. தலைப்பிரட்டை முட்டைக்குள் சிறிய தவளைகளாக உருவாகின்றன.
இதன் இயற்கையான வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக்காடுகள் ஆகும். இவை அச்சுறுத்தப்பட்ட மலைச்சூழ் வாழ்விடங்களாகும். இந்த தவளை முதன் முதலில் பொன்முடி மலையிலிருந்து விவரிக்கப்பட்டது. இதனால் இதன் சிற்றினப் பெயர் பொன்முடி எனப் பெயரிடப்பட்டது. ஆனால் இந்த சிற்றினம் தெற்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குள் பரவலான பரவலைக் கொண்டுள்ளது. கேரளாவில் வயநாடு, இடுக்கி மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களிலும், தமிழ்நாட்டில் வால்பாறையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேரினத்தில் இந்தச் சிற்றினம் கிட்டத்தட்ட 4 செ.மீ. அளவுள்ள ஆண்களைக் கொண்டதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.[2]