பொபட்ராவ் பாகுஜி பவார் | |
---|---|
இறப்பு | 1960 (வயது 60) |
இருப்பிடம் | ஹிவரே பசார், அகமது நகர் மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மழைநீர் சேகரிப்பு, நீர்நிலை பாதுகாப்பு, மரங்களை நடவு செய்தல் |
விருதுகள் | பத்மஸ்ரீ விருது (2020) |
பொபட்ராவ் பாகுஜி பவார் (Popatrao Baguji Pawar, பிறப்பு: 1960) என்பவர் இந்தியாவில், மகாராட்டிரா மாநிலத்தில், அகமது நகர் மாவட்டம், ஹிவரே பசார் கிராமத்தில் பிறந்த விவசாயி ஆவார். அந்த கிராமத்தில் முதுகலை பட்டத்தை, இவர் ஒருவர் மட்டுமே பெற்றிருந்தார். இவர் ஹிவரே பசார் கிராமத்தின் முன்னாள் கிராம ஊராட்சி ஆணையரும் ஆவார்.[1]
இவர் மகாராட்டிர மாநில அரசின் மாதிரி கிராம திட்டத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
ஒரு வறட்சியான கிராமத்தை தேர்வு செய்து அதை ஒரு வளர்ச்சியடைந்த கிராமமாக மாற்றிய பெருமை, இவருக்கு உண்டு. மகாராட்டிரா அரசு இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த விரும்பியது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட ஹிவரே பசார் கிராமத்தை பசுமையாக மாற்றி ஒரு வளமான மாதிரி கிராமமாக மாற்ற வழிவகைகளை செய்தார். இதனால் அண்ணா ஹசாரேவின், ராலேகாண் சித்தி கிராம வளர்ச்சியின் மாதிரியை போன்றே, இதையும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
ஹிவரே பசாரின் கிராமத்தின் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மைக்காக வளர்ச்சிக்காக 2007 ஆம் ஆண்டில் முதல் தேசிய விருதை வென்றது.
பொபட்ராவ் பாகுஜி பவார் தனது வறட்சியான கிராமத்தை பசுமையான மற்றும் வளமான கிராமமாக மாற்றியதற்காக, 2020 ஆம் ஆண்டுகான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[2][3]