பொப் வில்லிஸ்

பொப் வில்லிஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பொப் விலிஸ்
உயரம்6 அடி 6 அங் (1.98 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 448)சனவரி 9 1971 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசூலை 16 1984 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 26)செப்டம்பர் 5 1973 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபசூன் 4 1984 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 90 64 308 293
ஓட்டங்கள் 840 83 2690 615
மட்டையாட்ட சராசரி 11.50 10.37 14.30 9.46
100கள்/50கள் 0/0 0/0 0/2 0/1
அதியுயர் ஓட்டம் 28* 24 72 52*
வீசிய பந்துகள் 17357 3595 47990 14983
வீழ்த்தல்கள் 325 80 899 421
பந்துவீச்சு சராசரி 25.20 24.60 24.99 20.18
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
16 0 34 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 2 n/a
சிறந்த பந்துவீச்சு 8/43 4/11 8/32 7/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
39/– 22/– 134/– 84/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 7 2007

பொப் விலிஸ் (Bob Willis , பிறப்பு: மே 30 1949), இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 90 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 64 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 308 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 293 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1971 - 1984 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இவர் 1973 - 1984 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

இவர் சுந்தர்லாண்ட், துர்ஹாம் கவுண்டியில் மே 1949, 30 அன்று பிறந்தார். [1] [2] இவரது தந்தை பிபிசியின் ஊழியர்; வில்லிஸுக்கு டேவிட் என்ற ஒரு மூத்த சகோதரர் இருந்தார், இவருடன் தோட்டத்தில் துடுப்பாட்டம் விளையாடினார். இவருக்கு ஒரு மூத்த சகோதரியும் இருந்தார். [3] 1965 ஆம் ஆண்டில், அமெரிக்க இசைக்கலைஞர் பாப் டிலானின் நினைவாக வில்ஸ் தனது மூன்றாவது பெயரான "டிலான்" என்பதனைச் சேர்த்தார். [4] [5] கில்ட்ஃபோர்டில் உள்ள ராயல் கிராமர் பள்ளியில் வில்லிஸ் கல்வி கற்றார், [1] ஸ்டோக் டி அபெர்னான் துடுப்பாட்ட சங்கத்திற்காக தனது ஆரம்பகால துடுப்பாட்டங்களில் விளையாடினார். பின்னர் இவர் துணைத் தலைவராகவும், நிரந்தர உறுப்பினராகவும் ஆனார், [6] இவர் ஒரு பள்ளி மாணவராக இருந்த காலகட்டத்தில் கால்பந்தாட்ட வீரராகவும் இருந்தார். [4]

சர்வதேச போட்டிகள்

[தொகு]

காயமடைந்த ஆலன் வார்டுக்கு மாற்றாக வில்லிஸ் இங்கிலாந்தின் 1970-71 சுற்றுப்பயண அணியில் சேர்ந்தார். மேலும் டிசம்பரில் மேரிலேபோன் துடுப்பாட்ட சங்கத்திற்காக (எம்.சி.சி) பல போட்டிகளில் விளையாடினார். அடுத்தடுத்த தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இங்கிலாந்து ஆஷஸை வென்றது.சனவரி 9 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானர். இந்தப் போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி முதலில் மட்டையாடியது. இதில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களை எடுத்தார். பின்னர் பந்துவீச்சில் 9 ஓவர்கள் வீசி 26 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் நான்கு இழப்புகளைக் கைப்பற்றினார். ஆத்திரேலிய அனி 236 ஓட்டங்களில் அனைத்து இழப்புகளையும் இழந்தது. பின்னர் ஜெஃப்ரி பாய்காட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 142ஓட்டங்கள் எடுத்ததன் மூலமாக இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி அந்தப் போட்டியில் வென்றது.

மெல்போர்னில் நடந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் வில்லிஸ், முதல் ஆட்டப் பகுதியில் 73 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இழப்புகளையும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 42 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இழப்புகளையும் கைப்பற்றினார்.[7] தொடரின் இறுதிப் போட்டியில் இவர் நான்கு இழப்புகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி தொடரினைக் கைப்பற்றியது.[8] வில்லிஸ் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் 12 இழப்புகளுடன் 27.41 எனும் சராசரியினைக் கொண்டிருந்தார்.மேலும் பல "முக்கியமான கேட்சுகளையும்" பிடித்திருந்தார். [9] மார்ச் மாதம் ஆக்லாந்தில் நியூசிலாந்திற்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரின் இரண்டாவது போட்டியில் இவர் இரண்டு இழப்புகளை வீழ்த்தினார். [10]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

வில்லிஸ் தனது முதல் மனைவி ஜூலியட் ஸ்மைலை 1980 இல் மணந்தார். இவர்களுக்கு 1984 இல் ஒரு மகள் பிறந்தார். [11] அவர் தனது இரண்டாவது மனைவி லாரன் கிளார்க்கை 2005 இல் மணந்தார். [12] சுந்தர்லேண்டில் பிறந்திருந்தாலும், வில்லிஸ் மான்செஸ்டரில் ஒரு இளைஞனாக வாழ்ந்தார், மேலும் மான்செஸ்டர் சிட்டி எஃப்சியின் தீவிர ஆதரவாளராக இருந்தார், 1954 இல் மைனே சாலையில் நடந்த ஒரு போட்டியில் முதன்முதலில் கலந்து கொண்டார், அத்துடன் நியூகேஸில் யுனைடெட் அணிக்கு எதிரான 1955 எஃப்ஏ கோப்பை இறுதிப் போட்டியை நேரில் பார்த்தார். [13] [14] [15]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Player Profile: Bob Willis". CricInfo. பார்க்கப்பட்ட நாள் 26 October 2009.
  2. . 
  3. "Bob Willis – Wisden Cricketer of the Year 1978". Wisden Almanack. CricInfo. பார்க்கப்பட்ட நாள் 26 October 2009.
  4. 4.0 4.1 . 
  5. All Across The Telegraph: A Bob Dylan Handbook, ed. Michael Gray and John Bauldie, 1987, p.x
  6. "Membership Lists". Stoke D'Abernon Cricket Club. Archived from the original on 13 July 2012. பார்க்கப்பட்ட நாள் 26 October 2009.
  7. "The Ashes 1970/71 – 5th Test Australia v England". CricInfo. பார்க்கப்பட்ட நாள் 26 October 2009.
  8. "The Ashes 1970/71 – 7th Test Australia v England". CricInfo. பார்க்கப்பட்ட நாள் 26 October 2009.
  9. "Bob Willis – Wisden Cricketer of the Year 1978". Wisden Almanack. CricInfo. பார்க்கப்பட்ட நாள் 26 October 2009.
  10. "England in New Zealand Test Series 1971 – 2nd Test New Zealand v England". CricInfo. பார்க்கப்பட்ட நாள் 26 October 2009.
  11. "Bob Willis dead: Ashes legend dies at 70 after cancer battle". The Daily Telegraph. பார்க்கப்பட்ட நாள் 4 December 2019.
  12. . 
  13. Barclay, Tom (15 February 2015). "My Club: Bob Willis". The Sun. பார்க்கப்பட்ட நாள் 9 August 2018.
  14. Davies, Gareth (16 December 2004). "My Sport: Bob Willis". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 9 August 2018.
  15. Willis, Bob (22 November 2017). "Bob Willis makes Ashes prediction, assesses Australia's squad and hails Manchester City". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 9 August 2018.