பொறி | |
---|---|
இயக்கம் | சுப்பிரமணியம் சிவா |
தயாரிப்பு | கார்த்திக் |
கதை | சுப்பிரமணியம் சிவா |
இசை | தீனா |
நடிப்பு | ஜீவா பூஜா சீமான் கருணாஸ் |
விநியோகம் | Nivi-Pavi Creations |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொறி (Pori) 2007ம் ஆண்டில் வெளிவந்த ஒர் தமிழ் திரைப்படமாகும்.இத்திரைப்படத்தினை சுப்பிரமணியம் சிவா இயக்கியள்ளார்.முக்கிய கதாபாத்திரங்களாக ஜீவா,பூஜா,சீமான்,கருணாஸ்,நாகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
நேர்மையான ஆசிரியராக இருந்து ஓய்வு பெறும் நாகேஷின் மகன் ஹரி(ஜீவா), நடைபாதையில் சிறியளவில் புத்தக விற்பனை செய்யும் தொழிலை நடாத்துகின்றவராவார். மகனுக்காக தன்னுடைய ஓய்வூதியப் பணத்தை எல்லாம் செலவு செய்து ஒரு கடை வைத்துத்தருகிறார் ஹரியின் அப்பா. சந்தோஷமாக ஹரி தொழிலைத் தொடங்க நினைக்கும்போதுதான் அந்தக் கடை மலேசியா வணிகரான (சீமான்)வேறொருவருக்குச் சொந்தமானது என்பதும் தன் அப்பா ஏமாற்றப்பட்டதும் ஹரிக்குத் தெரியவருகிறது. சின்ன அளவில் நடந்துவரும் மோசடி இது என்று நினைத்து சம்மந்தப்பட்டவர்களை தண்டிக்க புறப்படும் ஹரிக்கு காத்திருக்கிறது பெரிய அதிர்ச்சி. இதில் சம்மந்தப்பட்டவர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலம் பெற்றவர்கள் என்பது தெரியவருகின்றது. தொடர்ந்து அவர்களை எதிர்க்கிறார். போலி பத்திரங்களைத் தயார் செய்து நடுத்தர குடும்பத்து மக்களை ஏமாற்றும் அந்தக் கும்பலை(விநாயகம் ரியல் எஸ்டேட்) சட்டத்தின் முன்னால் கொண்டுவந்து நிறுத்த நினைக்கிறார்.இதனை எவ்வாறு நடாத்திக் காட்டுகின்றார் என்பதே மீதிக்கதையாகும்.
நடிகர் | பாத்திரம் |
---|---|
ஜீவா | ஹரி |
பூஜா | பூஜா |
நாகேஷ் | ஹரியின் அப்பா |
இயக்குனர் சீமான் | மலேசிய வணிகர் |