போக்குவரத்து அமைச்சகம் (சிங்கப்பூர்)

போக்குவரத்து அமைச்சகம்
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைசிங்கப்பூர் அரசு
தலைமையகம்460 அலெக்சாண்ட்ரா சாலை, #39-00 & #33-00 மாடி பிஎசுஏ கட்டிடம், சிங்கப்பூர் 119963
பணியாட்கள்107[1]
ஆண்டு நிதிIncrease$5.29 பில்லியன் (மதிப்பீடு) சி.வெ (2012)[1]
அமைச்சர்
  • லூயி டக் யூ, அமைச்சர்
  • யோசப்பீன் தியோ, இணை அமைச்சர்
அமைப்பு தலைமை
  • சூய் சிங் குவாக், நிலைத்த செயலாளர்
கீழ் அமைப்புகள்
  • வான்வெளி விபத்து விசாரணை செயலகம், சிங்கப்பூர்
  • குடியிய வான்வழி ஆணையம், சிங்கப்பூர்
  • தரைவழி போக்குவரத்து ஆணையம்
  • கடல்வழி மற்றும் துறைமுக ஆணையம், சிங்கப்பூர்
  • பொதுப் போக்குவரத்து அவை
வலைத்தளம்www.mot.gov.sg

போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Transport, சுருக்கம்: MOT; சீனம்: 交通部, பின்யின்: Jiāotōngbù, மலாய்: Kementerian Pengangkutan Singapura) சிங்கப்பூரின் தரை, கடல், வான்வழிப் போக்குவரத்தை குடியரசின் எல்லைக்குள் கட்டுப்படுத்தும் சிங்கப்பூர் அரசின் அமைச்சகமாகும். இதன் தலைமையகம் பிஎசுஏ கட்டிடத்தில் இயங்குகிறது.[2]

நிறுவன கட்டமைப்பு

[தொகு]

தறபோது இந்த அமைச்சகத்தின் கீழ் நான்கு தன்னாட்சி பெற்ற அரசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் இயங்குகின்றன:

  1. குடியிய வான்வழி ஆணையம், சிங்கப்பூர் (CAAS)
  2. தரைவழி போக்குவரத்து ஆணையம் (LTA)
  3. கடல்வழி மற்றும் துறைமுக ஆணையம், சிங்கப்பூர் (MPA)
  4. பொதுப் போக்குவரத்து அவை (PTC)

இவை அமைச்சகத்தின் கொள்கைகளையும் நுண்ணறிவுமிக்க வழிகாட்டுதல்களையும் நடைமுறைப்படுத்துகின்றன.

அமைச்சகத்தில் 100 பணியாளர்கள் ஏழு பிரிவுகளில் பணியாற்றுகின்றனர். இவை வான்வழி போக்குவரத்து பிரிவு, தரைவழி போக்குவரத்து பிரிவு, கடல் போக்குவரத்து பிரிவு, பன்னாட்டு தொடர்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு, கூட்டாண்மை நிறுவனத் தொடர்பு பிரிவு, கூட்டாண்மை நிறுவன மேம்பாட்டு பிரிவு மற்றும் வான்வெளி விபத்து விசாரணை செயலகம், சிங்கப்பூர் (AAIB) ஆகும்.[3]

விருதுகள்

[தொகு]

சூன் 19, 2000ஆம் ஆண்டில் நிறுவன சீர்மைக்காக எம்ஓடி ஐஎசுஓ 9002 தரச்சான்றிதழ் பெற்றது. அக்டோபர் 2001இல் மக்கள் மேம்பாட்டாளர் விருதும் அக்டோபர் 2003இல் சிங்கப்பூர் தரநிலை வகுப்பு நிலையையும் பெற்றது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Head W: Ministry of Transport" (PDF). Budget 2012: Revenue and Expenditure Estimates. Ministry of Finance. பார்க்கப்பட்ட நாள் 2012-03-12.
  2. "Contact us பரணிடப்பட்டது 2012-02-29 at the வந்தவழி இயந்திரம்." Ministry of Transport. Retrieved on 15 February 2012." 460, Alexandra Road, PSA Building, #33-00 Singapore 119963"
  3. "Organisational Structure". Ministry of Transport. Archived from the original on 2012-02-20. பார்க்கப்பட்ட நாள் 2012-03-12.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ministry of Transport (Singapore)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.