Designations | |
---|---|
தெரியப்பட்டது | 19 ஆகத்து 2002 |
உசாவு எண் | 1206[1] |
போஜ் ஈரநிலம் (Bhoj Wetland) என்பது மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபால் நகரில் அமைந்துள்ள இரண்டு ஏரிகளுடன் கூடியது. இந்த இரண்டு ஏரிகள் போஜ்தால் மேல் ஏரி & கீழ் ஏரி ஆகும். இது நகர மையத்தின் மேற்கில் அமைந்துள்ளது.
போஜ்டால் 31 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மொத்த நீர்பிடிப்பு பகுதி 361 சதுர கி. மீ. ஆகும்.போஜ்தாலின் நீர்ப்பிடிப்பு பகுதி பெரும்பாலும் கிராமப்புறமாக உள்ளது. இதன் கிழக்கு முனையைச் சுற்றி சில நகரமயமாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. கீழ் ஏரி 1.29 சதுர கி.மீ. பரப்பளவில் 9.6 சதுர கி.மீ. நீர்பிடிப்பு பகுதியினைக் கொண்டுள்ளது. கீழ் ஏரி பெரும்பாலும் நகரமயமாக்கப்பட்ட பகுதியில் உள்ளது. கீழ் ஏரிக்கு போஜ்தாலிலிருந்து நிலத்தடி கசிவைப் பெறுகிறது.
போஜ்தால் மால்வாவின் ஆட்சியாளரான பரமரா ராஜா போஜ் (1005-1055) என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் தனது ராஜ்ஜியத்தின் கிழக்கு எல்லையைப் பாதுகாக்க போபாலை (இவரது பெயரும்) நிறுவினார். கோலன்சு ஆற்றின் குறுக்கே மண் அணை கட்டியதன் மூலம் இந்த ஏரி உருவாக்கப்பட்டது. கோலன் முன்பு ஹலாலி ஆற்றின் துணை ஆறாக இருந்தது. போஜ்தால் மற்றும் திசைதிருப்பல் கால்வாய் ஒன்றின் உருவாக்கத்துடன், கோலன் ஆற்றின் மேல் பகுதி மற்றும் போஜ்தால் இப்போது கலியாசோட் ஆற்றில் கலக்கிறது. பத்பதா அணை 1965-ல் போஜ்தாலின் தென்கிழக்கு மூலையில் கட்டப்பட்டது. இது இப்போது கலியாசோட் ஆற்றின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது.
கீழ் ஏரி 1794-ல் நவாப் கயாத் முகமது கானின் அமைச்சரான நவாப் சோட் கான் என்பவரால் நகரத்தை அழகுபடுத்த உருவாக்கப்பட்டது. இது ஒரு மண் அணைக்குப் பின்னால் உள்ளது. மேலும் தற்போது பட்ரா வடிகால் என்று அழைக்கப்படும் கோலன் ஆற்றின் கீழ்ப் பகுதி வழியாக ஹலாலி ஆற்றில் வடிகால் செல்கிறது. கலியாசோட் மற்றும் ஹலாலி ஆகிய இரண்டும் பேட்வா ஆற்றின் துணை ஆறுகள் ஆகும்.
இந்த ஏரிகள் பல நீர்ப்பறவைகள் உட்பட பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்குத் தாயகமாக உள்ளன. ஆகத்து 2002 முதல் பன்னாட்டு ராம்சார் சாசனத்தின் கீழ் இவை பன்னாடு முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.