போத்தனூர் Podanur | |
---|---|
நகராட்சி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் மாநகராட்சி |
Languages | |
• Official | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அ.கு.எ | 641023 |
வாகனப் பதிவு | TN 37 TN 99 |
தொலைபேசி குறியீட்டு எண் | +91-422 |
போத்தனூர் (Podanur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, கோயம்புத்தூர் மாநகரின் தெற்கு மண்டலத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இந்நகரம் நிறைய இரயில் பணியாளர்களையும், பல தொழிற்சாலை பணியாளர்களையும் கொண்டுள்ளது. அருகில் குறிச்சி நகரம், குனியமுத்தூர் நகரம், வெள்ளலூர் பேரூராட்சி, செட்டிபாளையம் பேரூராட்சி ஆகியவற்றை அருகே கொண்டுள்ளது. இந்த நகரத்தின் வரலாறு ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே தொடங்குகிறது. இங்குள்ள இரயில் நிலையம் 1862 ஆம் ஆண்டு முதலே செயல்பட்டு வருகிறது.[1]
பாலக்காட்டு கணவாயின் குளிர்ந்த காற்று நிரம்ப கிடைக்க பெறுவதால் ஆங்கிலேயர்கள் இதை ஏழைகளின் ஊட்டி என்று அழைத்தனர். அதனால் அவர்கள் தங்கள் காலனியையும் கோவையின் முதல் இரயில் நிலையத்தையும் இங்கு அமைத்தனர். இரயில் நிலையம் மட்டுமல்லாது கேரளா மற்றும் கொங்கு தேசத்திற்கான இரயில் கோட்டமாகவும் நிறுவப்பட்டது. கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு இரயில் நிலையங்கள் கட்டப்பட்ட பின்னர், போத்தனூர் இரயில் நிலையம் அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. இருப்பினும், இன்றும் இது ஒரு முக்கியமான தொடருந்து சந்திப்பாக கருதப்படுகிறது. இரயில்வேயின் தகவல் மற்றும் தொலைதொடர்பு பணிமனை, எவரெஸ்ட் கூரைகள், ஜி. டி. வெய்லெர், சந்திரிகா சோப்பு தயாரிப்பு நிறுவனம் மற்றும் பல சிறு, குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளது.