போத்தா

போத்தா
Bota
பேராக் தெங்ஙா மாவட்டத்தில் போத்தா அமைவிடம்
பேராக் தெங்ஙா மாவட்டத்தில்
போத்தா அமைவிடம்
போத்தா is located in மலேசியா
போத்தா
      போத்தா
ஆள்கூறுகள்: 4°21′0″N 100°52′0″E / 4.35000°N 100.86667°E / 4.35000; 100.86667
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்கி.பி. 1700
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
இணையதளம்http://www.mdpt.gov.my/

போத்தா (மலாய்: Bota) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், பேராக் தெங்ஙா மாவட்டத்தில் உள்ள ஒரு துணை மாவட்டக் கிராமப்பகுதி ஆகும். முக்கிம் என்று அழைக்கப் படுகிறது. இரு பகுதிகளை உள்ளடக்கியது: போத்தா கிரி (Bota Kiri) மற்றும் போத்தா கானான் (Bota Kanan). இரு பகுதிகளும் பேராக் நதியால் பிரிக்கப்பட்டு உள்ளன. போத்தா அதன் டுரியான் பழங்களுக்கு நன்கு அறியப் பட்ட கிராமப் பகுதியாகும்.

வரலாறு

[தொகு]

போத்தா பகுதியின் பழைய பெயர் பிரம்மன் இந்திரா (Brahman Indera). [1] பூதம் எனும் சொல்லில் இருந்து போத்தா எனும் சொல் உருவாகி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இந்தப் பகுதியின் பெயர் 18-ஆம் நூற்றாண்டில் இங்கு இருந்த ஒரு மாபெரும் பூதத்தின் பெயருடன் இணைந்து வந்ததாக உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.[2]

உள்ளூர்வாசிகளின் நம்பிக்கையின்படி போத்தா என்பது குகைகளில் மறைந்து வாழும் ஒரு பெரிய இராட்ச பூதமாகும்.[3]) அந்தப் பூதத்தின் பெயரில் அந்த இடத்திற்கும் பெயர் வந்து இருக்கலாம் என்று இன்றும் நம்புகிறார்கள்.

மக்கள் விவரங்கள்

[தொகு]

இங்கு மலாய் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். இவர்களை மூன்று முக்கியக் குழுக்களாகப் பிரிக்கலாம். பஞ்சார் (Banjar) மக்கள்; பேராக் மாநிலப் பூர்வீக மக்கள்; மற்றும் கெடா மாநிலப் பூர்வீக மக்கள். பஞ்சார் மக்கள் என்பவர்கள் போர்னியோ, கலிமந்தான் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

போத்தாவின் பெரும்பான்மையான மக்கள் பேராக் மாநிலப் பூர்வீகவாசிகள். இவர்கள் பேராக் ஆற்றின் கரைகளில் குடியமர்ந்து உள்ளனர். கெடா பூர்வீகவாசிகள் 1960-களில் இந்த நகரத்திற்கு குடிபெயர்ந்தனர். இப்பகுதியில் ஜாவானிய மற்றும் பூகிஸ் மக்களின் தடயங்களும் உள்ளன.

சீனர்களும் இந்தியர்களும் சிறுபான்மையினராக உள்ளனர்[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bota sebenarnya dahulu dikenali dengan nama lain iaitu Berahman Indera dan ianya adalah merupakan pusat pentadbiran Sultan Alauddin Mughayat Shah yang merupakan Sultan Perak ke 12 dan memerintah negeri Perak pada tahun 1720 hingga ke tahun 1728.
  2. "Bota asalnya nama gergasi" (in ms). Sinar Harian. 6 February 2019. https://www.sinarharian.com.my/article/11594/EDISI/Perak/Bota-asalnya-nama-gergasi. 
  3. Ahmat Adam (2016). Antara Sejarah dan Mitos: Sejarah Melayu & Hang Tuah dalam Historiografi Malaysia [Between History and Myth: Hang Tuah and Sejarah Melayu in Malaysia Historiography]. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789672165934.
  4. "Etnik Banjar di Perak" (in ms). The Malaya Post. 7 December 2020. https://www.themalayapost.my/etnik-banjar-di-perak/. 
  5. Rahim Bin Yahaya (1989). KRISIS UMNO 1987 - 1988: SATU PANDANGAN UMUM MASYARAKAT KAWASAN BOTA PERAK DARUL RIDZUAN (Thesis). Jabatan Antropologi dan Sosiologi, Universiti Malaya.

வெளி இணைப்புகள்

[தொகு]