போத்தா பிரத்தியுசா (Bodda Pratyusha) என்பவர் இந்தியவைச் சேர்ந்த சதுரங்க வீராங்கனை ஆவார் [1][2]. இவர் ஆந்திரப்பிரதேச மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள துனி என்ற நகரில் 1997 ஆம் ஆண்டு பிறந்தார். இந்நகரிலுள்ள சிறீ பிரகாசு வித்யா நிகேதனில் கல்வி கற்றார். 2012 ஆம் ஆண்டு இந்திய சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியின் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றார் [3]. 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பெண்கள் அனைத்துலக மாசுட்டர் என்ற பட்டத்தையும் வென்றார் [4].
2016 சூன் மாதத்தின் நிலவரப்படி பிடே வழங்கும் உலக தரவரிசை புள்ளிகள் பிரதியுசாவிற்கு 2346 என இருந்தது. கோனேரு அம்பி, துரோணவள்ளி அரிகா மற்றும் இலட்சுமி சாகிட்டி ஆகியோரை அடுத்து போத்தா பிரதியுசா நான்காவதாக பெண்கள் அனைத்துலக மாசுட்டர் பட்டம் வென்ற தெலுங்குப் பெண்ணாகக் கருதப்படுகிறார் [5]. என்.வி.எசு. இராம இராசு இவருக்குப் பயிற்சியாளராக இருக்கிறார்.