போனலு | |
---|---|
போனம் செய்யும் பெண்கள் | |
அதிகாரப்பூர்வ பெயர் | போனலு |
கடைபிடிப்போர் | தெலங்காணா |
வகை | தென்னிந்திய சக்தி-சைவ பாரம்பரியத்தின் திருவிழா. இது கிராம கலாச்சார பாரம்பரியமாகும் |
கொண்டாட்டங்கள் | ஞாயிற்றுகிழமைகளில் |
அனுசரிப்புகள் | தேவிக்கு பிரசாதம் |
தொடக்கம் | ஆடி (மாதம்) (சூலை/ஆகத்து) |
நிகழ்வு | வருடாந்திரத் திருவிழா |
போனலு (Bonalu) என்பது காளி தேவியை மையமாகக் கொண்ட ஒரு திராவிட பாரம்பரிய இந்துப் பண்டிகையாகும். இந்த திருவிழா ஆண்டுதோறும் தெலங்காணாவின் இரட்டை நகரங்களான ஐதராபாத் மற்றும் சிக்கந்திராபாத் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் கொண்டாடப்படுகிறது [1] . இது சூலை அல்லது ஆகத்து மாதங்களில் வரும் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் முதல் நாளிலும், கடைசி நாளிலும் எல்லம்மாவிற்கு ( மகாகாளியின் பல பிராந்திய வடிவங்களில் ஒன்று) சிறப்பு "பூசைகள்" (வழிபாடு / விழாக்கள்) செய்யப்படுகின்றன. [2] இந்தச் சடங்கு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக தேவிக்கு நன்றி செலுத்துவதாக கருதப்படுகிறது [3] .
போனம் என்ற சொல் போசனம் என்ற வார்த்தையின் சுருக்கமாகும். இது ஒரு சமசுகிருத கடன் சொல்லாகும். அதாவது இதற்கு தெலுங்கில் உணவு அல்லது விருந்து என்று பொருள். இது தேவிக்கு படைக்கப்படும் ஒரு பிரசாதமாகும்.
பெண்கள் பாலையும், வெல்லத்தையும் கொண்டு சமைத்த அரிசியை வேப்ப இலைகள், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட புதிய பித்தளை அல்லது மண் பானையில் தயார் செய்கிறார்கள். பெண்கள் தலையில் பானைகளை சுமந்துகொண்டு, கோயில் முழுவதும் சென்று தேவிக்கு மஞ்சள்-குங்குமம், வளையல்கள், புடவைகளுடன் போனம் பிரசாதம் செய்கிறார்கள் [1] .
மைசாம்மா, போச்சம்மா, யெல்லம்மா, பெத்தம்மா, தோக்கலம்மா, அங்கலம்மா, போலராமா, மரேம்மா, நூக்கலம்மா போன்ற பிராந்திய வடிவங்களில் அன்னை தேவியை வழிபடுவதை போனலு உள்ளடக்கியது.