போய்த்தா என்று அழைக்கப்படும் பெரிய அளவிலான கப்பல்கள், பண்டைய கலிங்க நாட்டில் உருவாக்கப்பட்டிருந்தன.[1] அன்றைய கலிங்க நாட்டின் பகுதிகளாக இருந்த ஒடிசாவும், மேற்கு வங்காளம். ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளும் இருந்தன. அந்த நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் இத்தகைய பெரும் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. வணிகர்கள் இவற்றில் ஏறி தென்கிழக்காசியா வரை பயணித்தனர்.[2][3]
இந்த கப்பல்களை கட்டுவதற்கான விதிகளும், முறையும் யுக்திகல்பதரு என்ற சமசுகிருதம் நூலில் எழுதப்பட்டிருந்தன. மரங்களை பயன்படுத்தி போஜராஜர் பல கப்பல்களை கட்டியதாக மாதளாபாஞ்சி குறிப்பிடுகிறது.[4] சிலிகா ஏரிக்கு அருகில் உடைந்த மரத்துண்டுகளும், உடைந்த கருவிகளும் கிடைத்துள்ளன. இவற்றில் இருந்து கோளாபாய் என்ற இடம் கப்பல் கட்டும் மையமாக செயல்பட்டதை அறிய முடிகிறது.[1]
இந்தோனேசியாவின் பாலிக்கு கடற்பயணம் மேற்கொண்ட கலிங்கத்து வணிகர்களை நினைவுகூரும் பண்டிகையே பாலி யாத்திரை. இந்நாளில் ஒரிய மக்களும், அவர்தம் குழந்தைகளும் மரம், பேப்பர் உள்ளிட்டவற்றில் செய்த பொம்மைக் கப்பல்களை செய்து நீரில் விடுவர்.[5] இந்த பொம்மை கப்பல்களில் விளக்கு ஏற்றப்பட்டிருக்கும்.