போர்க்களக் காட்சி கற்பலகை (Battlefield Palette) (இதனை கழுகு கற்பலகை, ஒட்டகச்சிவிங்கி கற்பலகை அல்லது அல்லது சிங்கக் கற்பலகை என்றும் அழைப்பர்)[1]இப்போர்க்கள கற்பலகை பண்டைய எகிப்தின் நக்காடா பண்பாட்டின் மூன்றாம் நக்காடா (கிமு 3,200 – கிமு 3,100) காலத்தைச் சேர்ந்தது.[2][3]இரண்டு துண்டுகளாக உடைந்துள்ள இப்போர்க்கள கற்பலகை, தற்போது ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானிய அருங்காட்சியகம் மற்றும் அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அழகிய கற்பலகை பண்டைய எகிப்தின் 12 போர்க்களக் காட்சிகளையும், சடங்குகளையும் விவரிக்கிறது. இது பண்டைய எகிப்திய மொழியின் படவெழுத்துகள் கொண்டுள்ள முதல் கல்வெட்டு கற்பலகையாகும். இக்கற்பலகையில் எகிப்திய வீரர்கள் மற்றும் எதிரி நாடான லிபியாவின் நிர்வாண நிலை போர்க் கைதிகளின் உருவங்களும், 9 விற்களும் கொண்டுள்ளது. 9 விற்கள் வெளிநாட்டு பழங்குடி எதிரிகளைக் குறிக்கிறது.
போர்க்களக் கள கற்பலகையில் ஒப்பனைப் பொருளைக் கலப்பதற்கான வட்ட வடிவப் பகுதி உள்ளது. இது போர்க்களக் காட்சியையும், எகிப்திய மொழியின் படவெழுத்துகளையும் கொண்டுள்ளது. இக்கற்பலகையில் ஓய்வெடுக்கும் பறவை, மனிதனை கொல்லும் சிங்கம், கழுகுகின் வியத்தகு உருவம், இரண்டு மான்கள், பழங்களுடன் கூடிய ஒரு பனை மரம், பாபிரஸ் செடிகள், எதிரிநாடான லிபியாவின் நிர்வாண நிலை போர்க்கைதியின்[4] உருவமும், கைதிக்குப் பின்புறம் எகிப்திய வீரனின் உருவமும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.[4] இக்கற்பலகை வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் வரலாற்றை எடுத்துக்காட்டுகிறது.[5][6]