போர்னாடி வனவிலங்கு சரணாலயம் | |
---|---|
அசாமில் உள்ள போர்னாடி வனவிலங்கு சரணாலயத்தின் அமைவிடம் | |
அமைவிடம் | உதல்குரி மாவட்டம் & பாக்சா மாவட்டம் அசாம், இந்தியா |
அருகாமை நகரம் | டோங்லா |
ஆள்கூறுகள் | 26°48′21″N 91°44′25″E / 26.80583°N 91.74028°E[1] |
பரப்பளவு | 26.22 km2 (10.12 sq mi) |
நிறுவப்பட்டது | 1980 |
நிருவாக அமைப்பு | அசாம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை |
போர்னாடி வனவிலங்கு சரணாலயம் (Bornadi Wildlife Sanctuary) என்பது 26.22 சதுர கிலோமீட்டர் (10.12 சதுர மைல்கள்) பரப்பளவு கொண்ட ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும். இமயமலை அடிவாரத்தில் வடக்கில் பூடான் எல்லையிலும், இந்தியாவின் அசாமின் உதல்குரி மாவட்டம் மற்றும் பாக்சா மாவட்டத்திலும் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் அதன் மேற்கு எல்லையில் ஓடும் போர்னாடி ஆற்றின் பெயரால் அழைக்கப்படுகிறது. இது டாங்லா நகரத்திலிருந்து 30 கிலோமீட்டர் (19 மைல்கள்) தொலைவிலும் [2] மற்றும் கவுகாத்தியிலிருந்து 130 கிமீ (81 மை) தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் 1980 ஆம் ஆண்டில் ஹிஸ்பிட் முயல் ( கப்ரோலாகஸ் ஹிஸ்பிடஸ் ) மற்றும் குள்ள காட்டுப் பன்றி ( போர்குலா சால்வேனியா ) ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்டது. வெள்ளைத் தொப்பி ரெட்ஸ்டார்ட், யூரோசிசா, போன்ற பறவைகளுக்கு இது தாயகமாக உள்ளது. மான் மற்றும் சிறுத்தை போன்ற பல விலங்குகளும் காணப்படுகின்றன.
இப்பகுதியின் காலநிலை வெப்பமானது [3]
குள்ள காட்டுப் பன்றி, தங்க நிற மந்தி, படைச் சிறுத்தை, ஹூலக் கிப்பன் மற்றும் வெள்ளை இறக்கைகள் கொண்ட மர வாத்து [4] போன்ற பாலூட்டிகள் மற்றும் மயில், இருவாய்ச்சி, சதுப்பு நில கவுதாரி, பெங்கால் ஃப்ளோரிக்கன், மீன் கொத்தி, மரங்கொத்தி, லிட்டில் கார்மோரண்ட், லிட்டில் கிரீன் ஹெரான், நைட் ஹெரான் போன்ற சில புலம்பெயர்ந்த மற்றும் உள்ளூர் பறவைகள் உள்ளன.[5]