போலசு உலர்தாவரகம்

போலசு உலர்தாவரக நூலகம், கேப்டவுன் பல்கலைக் கழகம், கேப்டவுன்.
ஆரி போலசு(Harry Bolus, 28 ஏப்ரல் 1834 – 25 மே 1911)[1]

போலசு உலர்தாவரகம் (Bolus Herbarium) என்பது கேப் டவுன் பல்கலைக் கழக வளாகத்திலுள்ளது. இப்பல்கலைக் கழகம் 1829 ஆம் ஆண்டு கேப் டவுன் நகரில், தென்னாப்பிரிக்காவில் தோற்றுவிக்கப்பட்டது. இப்பல்கலையின் முந்தைய பெயர் தெற்கு ஆப்பிரிக்கக் கல்லூரி. 1865 ஆம் ஆண்டு ஆரி போலசு (Harry Bolus), தனது உலர் தாவரகச் சேகரிப்புகளை, இப்பல்கலையின் நூலகத்திற்கு அன்பளிப்பாக்க் கொடுத்தார். தற்போது இச்சேகரத்தில், 3,20,000 உலர் தாவரக ஆவணங்கள் உள்ளன.[2] இதனை சுருக்கமாக, BOL எனக் குறிப்பிடுவர். ஆரி போலசு அளித்த ஆர்க்கிட், தரிசு நிலத்தாவரங்கள் (heath) சிறப்பு வாய்ந்த சேகரங்களாகத் திகழ்கின்றன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gunn, Mary; Codd, L. E. W. (1981). Botanical Exploration Southern Africa. CRC Press. p. 97. ISBN 978-0-86961-129-6.
  2. "The Bolus Herbarium, Global Plants on JSTOR". plants.jstor.org (in ஆங்கிலம்). Retrieved 28 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. "S2A3 Biographical Database of Southern African Science". www.s2a3.org.za. Retrieved 2021-03-23.

வெளியிணைப்புகள்

[தொகு]

33°57′23″S 18°27′42″E / 33.9565°S 18.4617°E / -33.9565; 18.4617