போலாநாத் சாராபாய் திவேதியா (Bholanath Sarabhai Divetia) (1822 - 1886 மே 11) இவர் ஓர் குசராத்தி கவிஞரும் இந்தியாவின் மத சீர்திருத்தவாதியும் ஆவார்.
இவர் அகமதாபாத்தைச் சேர்ந்த நகர் பிராமண குடும்பத்தில் பிறந்தார். [1] இவர் சட்டம் பயின்று, இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சியின் போது அரசு ஊழியராக பணியாற்றினார். இவர் முதல் வகுப்பு துணை நீதிபதி பதவிக்கு உயர்த்தப்பட்டார். 1874 இல் ஓய்வு பெற்ற இவருக்கு ஆங்கிலேயர்களால் ராவ் பகதூர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் ஒரு மரபுவழி மதக் குடும்பத்தில் பிறந்தார். சிலை வழிபாட்டை நம்பினார் ஆனால் ஒரு உருவமற்ற கடவுள் மீது நம்பிக்கையை ஏற்றுக்கொண்டார். மத சீர்திருத்தத்திற்காக இவர் பிரார்த்தனா சமாஜம் மற்றும் தர்மசபையை நிறுவினார். இவர் குசராத்தி எழுத்தாளர் நரசின்ராவ் திவேத்தியாவின் தந்தை ஆவார். [2]
இவர் 1886 மே 11 இல் இறந்தார். [3]
இவருக்கு குசராத்தி, ஆங்கிலம், மராத்தி, பாரசீக மற்றும் சமசுகிருத மொழிகள் தெரிந்திருந்தன. ஈசுவர் பிரார்த்தனமாலா என்ற இதழில் இவரது இரண்டு தொகுதிகள் மாதத்தின் முப்பது நாட்களுக்கு பிரார்த்தனைகளாக வடிவமைக்கப்பட்ட முப்பது பிரிவுகளில் உள்ள பிரார்த்தனைகளின் தொகுப்பாக வெளிவந்தது. கடைசி இரண்டு பிரிவுகளை இவரது மகன் நரசின்ராவ் திவேதியா முடித்தார். இவரது அபங்கமாலா தென்னிந்தியாவிலிருந்து வரும் அபங்கம் மற்றும் திண்டி வடிவ கவிதைகளாகும். [2] [4]
200 ஆண்டுகள் பழமையான அவேலியைஅகமதாபாத் மாநகராட்சியால் போலோநாத்தின் பாரம்பரிய சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் அவேலி என்பது அகமதாபாத்தின் பாரம்பரிய நடைப்பயணத்தில் உள்ளடக்கப்பட்ட இடங்களின் ஒரு பகுதியாகும். இது செதுக்கப்பட்ட மர வேலைகள் மற்றும் பச்சை மற்றும் தங்க வண்ணங்களில் வரையப்பட்ட மலர் உருவங்களுடன் உள்ளது. அகோ பகத் போன்ற பிரபல கவிஞர்கள் இந்த அவேலியை போலாநாத்தின் வாழ்நாளுக்கு முன்னரே அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளனர்.