பண்டிட் போலாநாத் பிரசன்னா | |
---|---|
![]() பன்சூரியை இசைக்கும் போலாநாத் பிரசன்னா | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | வாரணாசி, இந்தியா |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) | புல்லாங்குழல் கலைஞர் |
இசைக்கருவி(கள்) | பன்சூரி |
பண்டிட் போலாநாத் பிரசன்னா (Bholanath Prasanna) இந்தியாவைச் சேர்ந்த புல்லாங்குழல் அல்லது பன்சூரி வாசிக்கும் இசைக் கலைஞராவார். வாரணாசியில் பிறந்த இவர் புகழ்பெற்ற புல்லாங்குழல் கலைஞர் ஹரிபிரசாத் சௌரசியா என்பவருக்கு குரு ஆவார்.
போலாநாத் பிரசன்னா தனது தந்தை பண்டிட் கௌரி சங்கரிடமும் தனது சகோதரர் பண்டிட். இரகுநாத் பிரசன்னாவிடமும் இந்தியப் பாரம்பரிய இசையைக் கற்றார். உத்தரப் பிரதேச சங்கீத நாடக அகாதமி விருது (1989) ( செனாய் ) உட்பட பல்வேறு விருதுகள் மற்றும் கௌரவங்களைப் பெற்றவர்.
ஹரிபிரசாத் சௌரசியா,[1] இராசேந்திர பிரசன்னா (மருமகன்)[2], நிரஞ்சன் பிரசாத், அஜய் சங்கர் பிரசன்னா[3](மகன்) போன்ற பலருக்கு பன்சூரியை கற்பித்தார்.