போல்ட் கோட்டையகம் Boldt Castle | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | கோட்டை |
இடம் | ஹார்ட் தீவு |
நகரம் | நியூ யோர்க், அலெக்சாந்திரியா வளைகுடா |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
ஆள்கூற்று | 44°20′40″N 75°55′21″W / 44.344525°N 75.922575°W |
பெயர் காரணம் | ஜார்ஜ் போல்ட் |
கட்டுமான ஆரம்பம் | 1900 |
கட்டுமானம் நிறுத்தப்பட்டது | 1904 |
புதுப்பித்தல் செலவு | $15 million (1977) |
உரிமையாளர் | தவுசண்ட் ஐலாண்டுஸ் பிரிட்ஜ் ஆணையம் |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 6 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலை நிறுவனம் | G. W. & W. D. Hewitt |
வலைதளம் | |
www |
போல்ட் கோட்டை (Boldt Castle) என்பது ஐக்கிய அமேரிக்க மாநிலத்தின், நியூயோர்க் மாநிலத்தில் மாநிலத்தில் உள்ள ஹார்ட் தீவில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா தலமாகும். இது விருந்தினருக்கு ஆண்டின் மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் திறக்கப்படுகிறது. இது ஹார்ட் தீவின் இதயப்பகுதியான செயிண்ட் லாரன்ஸ் ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. ஹார்ட் தீவானது ஜெஃப்சர்ன் மாவட்டத்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரத்தின் ஒரு பகுதியான உள்ளது. இது அமெரிக்க பணக்காரரான ஜார்ஜ் போல்ட் என்பவர் கட்டிய ஒரு தனியார் மாளிகை ஆகும். தற்போது இதை தவுசண்ட் ஐலாண்டுஸ் பிரிட்ஜ் ஆணையத்தால் ஒரு சுற்றுலாத் தலமாக பராமரிக்கப்படுகிறது.
போல்ட் கோட்டையானது, 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜார்ஜ் சி போல்ட், தன் மனைவி லூயிஸுக்காக இந்தக் கோட்டையைக் கட்டத் தொடங்கினார். ஆனால், கட்டிட வேலை ஆரம்பித்த நான்கு மாதங்களிலேயே மாரடைப்பால் லூயிஸ் இறந்துவிட்டார். மனைவியின் இறப்பால் மனமுடைந்த போல்ட், கட்டுமானப் பணிகளை நிறுத்தியதோடு, அந்தத் தீவுக்கு வருவதையும் நிறுத்திவிட்டார். இந்தத் தனித்துவமான கோட்டையை பின்னர் அமெரிக்க அரசு சீரமைத்து, சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்குத் திறந்துவைத்துள்ளது.[1]
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)