எம். கனகரத்தினம் M. Canagaratnam | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் பொத்துவில் | |
பதவியில் 1977–1980 | |
பின்னவர் | ரங்கநாயகி பத்மநாதன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 ஏப்ரல் 1924 |
இறப்பு | 20 ஏப்ரல் 1980 | (அகவை 56)
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
இனம் | இலங்கைத் தமிழர் |
மயில்வாகனம் கனகரத்தினம் (Mylvaganam Canagaratnam, 15 ஏப்ரல் 1924 – 20 ஏப்ரல் 1980) என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
கனகரத்தினம் 1924 ஏப்ரல் 15 இல் பிறந்தவர்.[1] இவர் 1977 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக இரட்டை-அங்கத்தவர் தொகுதியான பொத்துவிலில் போட்டியிட்டு இரண்டாவதாகத் தெரிவாகி நாடாளுமன்றம் சென்றார்.[2] தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களில் (1977 திசம்பரில்) இவர் அன்றைய ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார். இதன் மூலம் அவர் மட்டக்களப்புக்கான மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3][4]
கனகரத்தினம் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு முன்னால் 1978 சனவரி 27 இல் இனந்தெரியாதோரால் சுடப்பட்டார்.[5][6] இவர் மீதான தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[4][7] படுகாயமடைந்த நிலையில் 1980 ஏப்ரல் 20 இல் இவர் காலமானார்.[3][6]
{{cite web}}
: Check date values in: |date=
(help)