மயில்வாகனம் திலகராஜ் Mailvaganam Thilakarajah | |
---|---|
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகத்து 2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 செப்டம்பர் 1973 |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | தொழிலாளர் தேசிய சங்கம் |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ் முற்போக்குக் கூட்டணி |
இனம் | மலையகத் தமிழர் |
மயில்வாகனம் திலகராஜா (பிறப்பு: 29 செப்டம்பர் 1973) இலங்கை, மலையகத் தமிழ்க் கவிஞரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். மல்லியப்பு சந்தி திலகர் என்ற பெயரில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.
திலகராஜா நுவரெலியா மாவட்டம், மடகொம்பரை எனும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அட்டன் ஐலன்ட்சு கல்லூரியில் கல்வி பயின்றவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வணிகத்துறையில் 2000ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். பட்டதாரி ஆசிரியரான இவர் வணிக நிறுவனங்களின் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். 'பாக்யா பதிப்பகம்' எனும் பதிப்பகத்தினை நடத்தி வருகின்றார்.
திலகராஜ் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவான தொழிலாளர் தேசிய முன்னணியில் பொதுச் செயலாளர் ஆவார்.
2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் நிறுத்தப்பட்டு 67,761 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாகத் தெரிவானார்.[1][2][3][4][5]