மகபூப் சௌக் மணிக்கூண்டு கோபுரம் Mahboob Chowk Clock Tower | |
---|---|
![]() | |
அமைவிடம் | ஐதராபாத்து (இந்தியா), இந்தியா |
மகபூப் சௌக் மணிக்கூண்டு கோபுரம் (Mahboob Chowk Clock Tower) ஐதராபாத்து இராச்சியத்தில் இடம்பெற்றிருந்த ஐந்து மாடிகள் கொண்ட ஒரு செயற்கை கடிகார கோபுரமாகும். 1892 ஆம் ஆண்டில் ஐதராபாத்தின் பிரதமர் அசுமான் ஜா இம்மணிக்கூண்டைக் கட்டினார். ஐதராபாத்தின் ஆறாவது நிசாம் மிர் மகபூப் அலி கான் பெயரிடப்பட்ட இம்மணிகூண்டு இருக்கும் சௌக் பகுதி ஐதராபாத்து நகரத்தின் கட்டடக்கலையின் பாரம்பரிய பகுதியாக கருதப்படுகிறது.[1][2]
ஒரு சிறிய தோட்டத்தின் நடுவே இக்கடிகார கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது; அதன் பக்கங்களில் நான்கு பெரிய கடிகாரங்கள் உள்ளன. எந்த திசையிலிருந்தும் நேரத்தைக் காண அவை உதவுகின்றன. கடிகார கோபுரம் துருக்கிய பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சார்மினாருக்கு மேற்கே அமைந்துள்ள இம்மணிக்கூண்டு லாத் பசாருக்கு அருகில் அமைந்துள்ளது.[3][4][5][6]