நாடு(கள்) | ஆத்திரேலியா இங்கிலாந்து |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
வடிவம் | தேர்வு, ஒருநாள் மற்றும் இ20 என அனைத்து வகைகளும் கலந்து. புள்ளிகள் அடிப்படையிலான தொடர் |
முதல் பதிப்பு | 1934–35 |
கடைசிப் பதிப்பு | 2023 |
தற்போதைய வாகையாளர் | ஆத்திரேலியா |
அதிகமுறை வெற்றிகள் | ஆத்திரேலியா (9 முறை ) |
அதிகபட்ச ஓட்டங்கள் | எலிஸ் பெர்ரி (1552) |
அதிகபட்ச வீழ்த்தல்கள் | எலிஸ் பெர்ரி (68) |
மகளிர் ஆஷஸ் என்பது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடக்கும் துடுப்பாட்ட தொடருக்கான பெயர். ஆண்கள் துடுப்பாட்டத்தில் நடைபெறும் ஆஷஸ் தொடரை முன்மாதிரியாகக் கொண்டு இத்தொடர் உருவாக்கப்பட்டது. 2013 வரை, தேர்வு போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் தொடரின் வெற்றியாளர் முடிவு செய்யப்பட்டார்கள்.
2013 மகளிர் ஆஷஸ் தொடரிலிருந்து தேர்வு, ஒரு நாள் மற்றும் இ20ப என அனைத்து வகையான போட்டிகளின் முடிவுகளை வைத்து புள்ளிகள் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கும் முறை உருவானது. தேர்வு போட்டியில் வெல்லும் அணிக்கு 4 புள்ளிகளும், ஒரு நாள் மற்றும் இ20 போட்டிகளில் வெல்லும் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். தேர்வு போட்டி சமனாகும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.[1]
இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையில் தேர்வு போட்டிகள் நடைபெறும் என 1931-ல் அறிவிக்கப்பட்டது. [2] ஆனால், முதல் ஆஷஸ் தேர்வு போட்டியானது 1934-ல் விளையாடப்பட்டது.[3] அப்போது இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்த பெட்டி ஆர்ச்டேலி , இத்தொடரை "விளையாட்டின் மீதான காதலுக்காக" மட்டுமே விளையாடுவதாகவும்,ஆண்கள் ஆஷஸ் தொடருடன் இத்தொடரை தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்றும் கூறினார். [4]
இதுவரை மொத்தம் 24 ஆஷஸ் தொடர்களும், 51 தேர்வுப் போட்டிகளும் விளையாடப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொடரும் 1 முதல் 5 தேர்வுப் போட்டிகள் கொண்டதாக இருக்கும்.. 2001 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தொடர் விளையாடப்பட்டு வருகிறது, அப்போது முதல், ஒரு தொடரில் ஒன்று அல்லது இரண்டு தேர்வுப் போட்டிகள் மட்டுமே விளையாடப்படுகின்றன. 2013 தொடரிலிருந்து,தேர்வு, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் இருபது 20 சர்வதேசப் போட்டிகள் என அனைத்து வகை ஆட்டங்களும் வெற்றியாளரைத் தீர்மானிக்க பயன்படுத்தப்படுகிறது . 2015 முதல், ஒரு தேர்வு வெற்றியானது நான்கு புள்ளிகளுக்கு மதிப்புள்ளது (போட்டி சமனாகும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் ), மற்றும் ஒரு நாள் மற்றும் இ20 போட்டியில் வெற்றி பெறுவதற்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். [1]
கடைசியாக நடந்த 2021-22 ஆஷஸ் தொடரில் ஆத்திரேலியா வெற்றி பெற்று கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது.
விளையாடியவை | ஆஸ்திரேலியா வெற்றி | இங்கிலாந்து வெற்றி | சமன் | மேற்கோள்கள் | |
---|---|---|---|---|---|
அனைத்து தொடர்கள் | 24 | 10 | 6 | 8 | [5] |
ஆஸ்திரேலியாவில் நடந்த தொடர்கள் | 12 | 6 | 3 | 3 | [5] |
இங்கிலாந்தில் நடந்த தொடர்கள் | 12 | 4 | 3 | 5 | [5] |
விளையாடியவை | ஆஸ்திரேலியா வெற்றி | இங்கிலாந்து வெற்றி | சமன் | மேற்கோள்கள் | |
---|---|---|---|---|---|
அனைத்து தேர்வுப் போட்டிகள் | 45 | 11 | 8 | 26 | [6] |
ஆஸ்திரேலியாவில் நடந்தவை | 22 | 6 | 4 | 12 | [7] |
இங்கிலாந்தில் நடந்தவை | 23 | 5 | 4 | 14 | [7] |
அனைத்து தொடர்கள் | 18 | 7 | 4 | 7 | [5] |
ஆஸ்திரேலியாவில் நடந்த தொடர்கள் | 9 | 5 | 2 | 2 | [5] |
இங்கிலாந்தில் நடந்த தொடர்கள் | 9 | 2 | 2 | 5 | [5] |
விளையாடியவை | ஆஸ்திரேலியா வெற்றி | இங்கிலாந்து வெற்றி | சமன் | மேற்கோள்கள் | |
---|---|---|---|---|---|
அனைத்து போட்டிகள் | 42 | 22 | 14 | 4 | [8] |
ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டிகள் | 21 | 12 | 5 | 2 | [9] |
இங்கிலாந்தில் நடந்த போட்டிகள் | 21 | 10 | 9 | 2 | [10] |
அனைத்து தொடர்கள் | 6 | 3 | 2 | 1 | [5] |
ஆஸ்திரேலியாவில் நடந்த தொடர்கள் | 3 | 1 | 1 | 1 | [5] |
இங்கிலாந்தில் நடந்த தொடர்கள் | 3 | 2 | 1 | 0 | [5] |
தேர்வு போட்டிகளின் அடிப்படையில் தொடரின் வாகையாளர் முடிவு செய்யப்பட தொடர்கள் :
வ.எண் | தொடர் நடந்த ஆண்டு | தொடர் நடந்த நாடு | முதல் போட்டி | விளையாடிய தேர்வு போட்டிகள் (திட்டமிடப்பட்டவை ) | ஆத்திரேலியா வென்ற போட்டிகள் | இங்கிலாந்து வென்ற போட்டிகள் | சமனான போட்டிகள் | தொடரின் முடிவு | கோப்பையை வென்ற அணி |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | 1934–35 | ஆத்திரேலியா | 28 டிசம்பர் 1934 | 3 | 0 | 2 | 1 | இங்கிலாந்து | இங்கிலாந்து |
2 | 1937 | இங்கிலாந்து | 12 ஜூன் 1937 | 3 | 1 | 1 | 1 | சமன் | இங்கிலாந்து |
3 | 1948–49 | ஆத்திரேலியா | 15 சனவரி 1949 | 3 | 1 | 0 | 2 | ஆத்திரேலியா | ஆத்திரேலியா |
4 | 1951 | இங்கிலாந்து | 16 ஜூன் 1951 | 3 | 1 | 1 | 1 | சமன் | ஆத்திரேலியா |
5 | 1957–58 | ஆத்திரேலியா | 7 பிப்ரவரி 1958 | 3 (4) | 0 | 0 | 3 | சமன் | ஆத்திரேலியா |
6 | 1963 | இங்கிலாந்து | 15 ஜூன் 1963 | 3 | 0 | 1 | 2 | இங்கிலாந்து | இங்கிலாந்து |
7 | 1968–69 | ஆத்திரேலியா | 27 டிசம்பர் 1968 | 3 | 0 | 0 | 3 | சமன் | இங்கிலாந்து |
8 | 1976 | இங்கிலாந்து | 19 ஜூன் 1976 | 3 | 0 | 0 | 3 | சமன் | இங்கிலாந்து |
9 | 1984–85 | ஆத்திரேலியா | 13 டிசம்பர் 1984 | 5 | 2 | 1 | 2 | ஆத்திரேலியா | ஆத்திரேலியா |
10 | 1987 | இங்கிலாந்து | 1 ஆகஸ்ட் 1987 | 3 | 1 | 0 | 2 | ஆத்திரேலியா | ஆத்திரேலியா |
11 | 1991–92 | ஆத்திரேலியா | 19 பிப்ரவரி 1992 | 1 | 1 | 0 | 0 | ஆத்திரேலியா | ஆத்திரேலியா |
12 | 1998 | இங்கிலாந்து | 6 ஆகஸ்ட் 1998 | 3 | 0 | 0 | 3 | சமன் | ஆத்திரேலியா |
13 | 2001 | இங்கிலாந்து | 24 ஜூன் 2001 | 2 | 2 | 0 | 0 | ஆத்திரேலியா | ஆத்திரேலியா |
14 | 2002–03 | ஆத்திரேலியா | 15 பிப்ரவரி 2003 | 2 | 1 | 0 | 1 | ஆத்திரேலியா | ஆத்திரேலியா |
15 | 2005 | இங்கிலாந்து | 9 ஆகஸ்ட் 2005 | 2 | 0 | 1 | 1 | இங்கிலாந்து | இங்கிலாந்து |
16 | 2007–08 | ஆத்திரேலியா | 15 பிப்ரவரி 2008 | 1 | 0 | 1 | 0 | இங்கிலாந்து | இங்கிலாந்து |
17 | 2009 | இங்கிலாந்து | 10 சூலை 2009 | 1 | 0 | 0 | 1 | சமன் | இங்கிலாந்து |
18 | 2010–11 | ஆத்திரேலியா | 22 சனவரி 2011 | 1 | 1 | 0 | 0 | ஆத்திரேலியா | ஆத்திரேலியா |
புள்ளிகள் அடிப்படையில் வெற்றியாளர் முடிவு செய்யப்பட்ட தொடர்கள் (2013 முதல்):
வ.எண் | தொடர் நடந்த ஆண்டு | தொடர் நடந்த நாடு | முதல் போட்டி | தேர்வு போட்டிகள் | ஆத்திரேலியா வென்ற தேர்வுப்போட்டிகள் | இங்கிலாந்து வென்ற தேர்வு போட்டிகள் | சமனான தேர்வுகள் | ஒருநாள் போட்டிகள் | இருபது20 போட்டிகள் | ஆஸ்திரேலியா பெற்ற புள்ளிகள் |
இங்கிலாந்து பெற்ற புள்ளிகள் |
தொடர் முடிவு | கோப்பையை வென்ற அணி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
19 | 2013 | இங்கிலாந்து | 11 ஆகஸ்ட் 2013 | 1 | 0 | 0 | 1 | இங்கிலாந்து 2-1 ஆத்திரேலியா | இங்கிலாந்து 3-0 ஆத்திரேலியா | 4 | 12 | இங்கிலாந்து | இங்கிலாந்து |
20 | 2013-14 | ஆஸ்திரேலியா | 10 ஜனவரி 2014 | 1 | 0 | 1 | 0 | ஆத்திரேலியா 2-1 இங்கிலாந்து | ஆத்திரேலியா 2-1 இங்கிலாந்து | 8 | 10 | இங்கிலாந்து | இங்கிலாந்து |
21 | 2015 | இங்கிலாந்து | 21 ஜூலை 2015 | 1 | 1 | 0 | 0 | இங்கிலாந்து 1-2 ஆத்திரேலியா | இங்கிலாந்து 2-1 ஆத்திரேலியா | 10 | 6 | ஆஸ்திரேலியா | ஆஸ்திரேலியா |
22 | 2017–18 | ஆஸ்திரேலியா | 22 அக்டோபர் 2017 | 1 | 0 | 0 | 1 | ஆத்திரேலியா 2-1 இங்கிலாந்து | ஆத்திரேலியா 1-2 இங்கிலாந்து | 8 | 8 | சமன் | ஆஸ்திரேலியா |
23 | 2019 | இங்கிலாந்து | 2 ஜூலை 2019 | 1 | 0 | 0 | 1 | இங்கிலாந்து 0-3 ஆத்திரேலியா | இங்கிலாந்து 1-2 ஆத்திரேலியா | 12 | 4 | ஆஸ்திரேலியா | ஆஸ்திரேலியா |
24 | 2021–22 | ஆஸ்திரேலியா | 20 ஜனவரி 2022 | 1 | 0 | 0 | 1 | ஆத்திரேலியா 3-0 இங்கிலாந்து | ஆத்திரேலியா 1-0 இங்கிலாந்து | 12 | 4 | ஆஸ்திரேலியா | ஆஸ்திரேலியா |
25 | 2023 | இங்கிலாந்து | 22 ஜூன் 2023 |
வீரர் | அணி | விளையாடிய காலம் | போட்டிகளில் | ஓட்டங்கள் | சராசரி | அதிகபட்ச ஸ்கோர் | 100 | 50 |
---|---|---|---|---|---|---|---|---|
ஜான் பிரிட்டின் | இங்கிலாந்து | 1984–1998 | 11 | 1024 | 56.88 | 167 | 3 | 5 |
மிர்டில் மக்ளகன் | இங்கிலாந்து | 1934–1951 | 12 | 919 | 43.76 | 119 | 2 | 6 |
சார்லோட் எட்வர்ட்ஸ் | இங்கிலாந்து | 1998–2011 | 10 | 896 | 56.00 | 114 * | 1 | 7 |
கரேன் ரோல்டன் | ஆத்திரேலியா</img> ஆத்திரேலியா | 1998–2009 | 11 | 874 | 58.26 | 209 * | 2 | 4 |
ரேச்சல் ஹெய்ஹோ பிளின்ட் | இங்கிலாந்து | 1963–1976 | 9 | 740 | 49.33 | 179 | 2 | 4 |
வீரர் | அணி | விளையாடிய காலம் | போட்டிகளில் | வீழ்த்தல்கள் | ஓட்டங்கள் | சராசரி | சிறந்த பந்துவீச்சு | எகானமி | 5 | 10 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெட்டி வில்சன் | ஆத்திரேலியா | 1949–1958 | 9 | 53 | 673 | 12.69 | 7/7 | 1.67 | 3 | 1 |
கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் | ஆத்திரேலியா | 1998–2005 | 9 | 52 | 950 | 18.26 | 5/29 | 2.01 | 2 | 0 |
மிர்டில் மக்ளகன் | இங்கிலாந்து | 1934–1951 | 12 | 51 | 862 | 16.90 | 7/10 | 1.68 | 2 | 0 |
மேரி டக்கன் | இங்கிலாந்து | 1949–1963 | 11 | 47 | 694 | 14.76 | 7/6 | 1.88 | 3 | 0 |
பெக்கி அன்டோனியோ | ஆத்திரேலியா | 1934–1937 | 6 | 31 | 431 | 13.90 | 6/49 | 2.61 | 3 | 0 |
வீரர் | அணி | போட்டிகள் | ஓட்டங்கள் | சராசரி | அதிகபட்ச ஸ்கோர் | 100 | 50 |
---|---|---|---|---|---|---|---|
எல்லிஸ் பெர்ரி | ஆத்திரேலியா | 35 | 1425 | 59.38 | 213 * | 2 | 9 |
மெக் லானிங் | ஆத்திரேலியா | 28 | 1127 | 38.86 | 133 * | 2 | 7 |
ஹீதர் நைட் | இங்கிலாந்து | 32 | 977 | 30.53 | 157 | 1 | 7 |
நாட் ஸ்கிவர்-பிரண்ட் | இங்கிலாந்து | 33 | 826 | 30.59 | 88 | 0 | 4 |
சாரா டெய்லர் | இங்கிலாந்து | 31 | 822 | 25.69 | 77 | 0 | 7 |
வீரர் | அணி | போட்டிகள் | வீழ்த்தல்கள் | ஓட்டங்கள் | சராசரி | சிறந்த பந்துவீச்சு | 5 |
---|---|---|---|---|---|---|---|
எல்லிஸ் பெர்ரி | ஆத்திரேலியா | 35 | 55 | 1232 | 22.40 | 7/22 | 3 |
மேகன் ஷூட் | ஆத்திரேலியா | 25 | 43 | 1297 | 17.37 | 4/22 | 0 |
ஜெஸ் ஜோனாசென் | ஆத்திரேலியா | 31 | 37 | 975 | 26.35 | 4/38 | 0 |
அன்யா ஷ்ரப்சோல் | இங்கிலாந்து | 28 | 36 | 1242 | 34.50 | 4/11 | 0 |
கேத்ரின் சிவர்- ப்ரண்ட் | இங்கிலாந்து | 28 | 35 | 1056 | 30.17 | 3/21 | 0 |