மகளிர் திரைப்படம்

மகளிர் திரைப்படம் (Woman's film) என்பது ஒரு திரைப்பட வகையாகும். இது பெண்களை மையமாகக் கொண்ட கதையில் பெண் கதாநாயகிகளை முதன்மைப்படுத்தி பெண் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மகளிர் திரைப்படங்கள் பொதுவாக உள்நாட்டு வாழ்க்கையைச் சுற்றியுள்ள பிரச்சினைகள், குடும்பம், தாய்மை, சுய தியாகம் மற்றும் காதல் போன்ற 'பெண்களின் பிரச்சனைகளை' சித்தரிக்கின்றன.

தமிழ்த் திரைப்படத்துறையில் அவள் (1972), அவள் ஒரு தொடர்கதை (1974), இந்திரா (1995), பவானி (2011), அம்மா கணக்கு (2016), மகளிர் மட்டும் (2017), அறம் (2017), நாச்சியார் (2018) போன்ற பெண்கள் சார்ந்த திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. விஜயசாந்தி, ஜோதிகா, நயன்தாரா போன்ற நடிகைகள் இந்த வகை திரைப்படத்தில் பெரும்பாலும் நடித்துள்ளனர்.

மகளிர் திரைப்படங்கள் பெரும்பாலும் ஆண் திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் இயக்குனர்களால் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட படங்களாகும். அதே சமயம் மகளிர் திரைப்படைத்துறை பெண்களால் தயாரிக்கப்பட்ட படங்களை உள்ளடக்கியது.[1]

ஹாலிவுட்

[தொகு]

இந்த படங்கள் 1950 கள் மற்றும் 1960 களின் முற்பகுதியில் ஊமைத் திரைப்பட சகாப்தத்திலிருந்து தயாரிக்கப்பட்டன. ஆனால் 1930 கள் மற்றும் 1940 களில் மிகவும் பிரபலமாக இருந்து, இரண்டாம் உலகப் போரின்போது மிகவும் பிரபலத்தின் உச்சத்தை எட்டியது. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் மகளிர் திரைப்பட வகை படங்கள் ஹாலிவுட் திரைத்துறையில் தொடர்ந்து தயாரித்திருந்தாலும் இந்த சொல் 1960 களில் மறைந்துவிட்டது.[2] இயக்குனர்கள் ஜார்ஜ் கூகார், டக்ளஸ் சிர்க், மேக்ஸ் ஓபல்ஸ், மற்றும் ஜோசப் வான் ஸ்டெர்ன்பெர்க் ஆகியோர் பெண்ணினம் தொடர்பான திரைப்படங்களை இயக்கியுள்னர்.[2] ஜோன் கிராபோர்டு, பெட் டேவிஸ் மற்றும் பார்பரா இசுட்டான்விக் ஆகியோர் இந்த வகை திரைப்படத்தில் மிகச் சிறந்த நட்சத்திரங்கள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ashby 2010, ப. 153.
  2. 2.0 2.1 Heung, Marina (1990). Howard, Angela; Kevenik, Frances M. (eds.). Handbook of American Women's History. New York: Garland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8240-8744-9. {{cite book}}: Cite has empty unknown parameter: |chapterurl= (help)