மகாதர்மரக்சிதர் (Mahadhammarakkhita), கிமு இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்க பாக்திரியா பேரரசர் மெனாண்டர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த பௌத்த சமய அறிஞர் ஆவார்.
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்திற்கு வடக்கில் 150 கிமீ தொலைவில் உள்ள காக்கேசியாவின் அலெக்சாண்டிரியா பகுதியிலிருந்த பௌத்த அறிஞர் மகாதர்மரக்சிதர், 30,000 பிக்குகளுடன் இலங்கையின் அனுராதபுரத்தில் ருவான்வெலிசாய எனும் பெரும் தூபியின் திறப்பு விழாவிற்கு வருகை தந்தார் என்பதை பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் எனும் பௌத்த வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மகாவம்சம், XXIX) இலங்கை மன்னர் துட்டகைமுனு (ஆட்சி:கிமு 161 - 137) இறந்த சில ஆண்டுகளில் ருவான்வெலிசாய மகாதூபி கட்டி முடிக்கப்பட்டது.