மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை (Mahatma Gandhi Memorial Hospital) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் நகரில் அமைந்துள்ளது. இது 1450 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகும். இது தெலுங்கானா அரசாங்கத்தால் நிருவகிக்கப்படுகிறது.[1]
தெலங்கான சுகாதாரத் துறை அமைச்சர் எட்லா இராஜேந்தர், மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்த போதனா மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.[2] மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 3000 வெளி நோயாளிகளைக் கொண்டிருக்கும் வகையில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாகத் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெறுகிறது.