குறிக்கோளுரை | मयि श्रीः श्रयतां यशः |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | நான் செழிப்பு, பெயர் மற்றும் புகழுடன் ஆசீர்வதிக்கப்படுகிறேன் |
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 2016 |
வேந்தர் | மகேஷ் சர்மா |
துணை வேந்தர் | சஞ்சய் ஸ்ரீவத்சா |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
இணையதளம் | www |
மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகம் ( Mahatma Gandhi Central University) இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள மோதிஹாரியில் அமைந்துள்ள ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் ஆகும். இது 7 பள்ளிகளையும் 20 கல்வித் துறைகளையும் கொண்டுள்ளது.
திசம்பர் 17, 2014 இல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற மத்தியப் பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) சட்டம், 2014, பீகார் மாநிலத்தில் கங்கை நதியின் வடக்கே உள்ள எல்லை வரை அதன் பிராந்திய அதிகார வரம்பைக் கொண்ட மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு வழிவகுத்தது. [1]
தென் பீகார் மத்திய பல்கலைக்கழகத்திற்கு (CUSB) அடுத்து பீகாரில் உள்ள இரண்டாவது மத்திய பல்கலைக்கழகம் இதுவாகும்.
இந்தப் பல்கலைக்கழகமானது மத்தியப் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2009 ன் விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறது. [2] இந்தியக் குடியரசுத் தலைவர் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையாளராவார். வேந்தர், பல்கலைக்கழகத்தின் சம்பிரதாயத் தலைவராக இருக்கும் போது நிர்வாக அதிகாரங்கள் துணைவேந்தரிடம் இருக்கும். நீதிமன்றம், நிர்வாகக் குழு, கல்விக் குழு, கல்வி வாரியம் மற்றும் நிதிக் குழு ஆகியவை பல்கலைக்கழகத்தின் ஆட்சி ஆணைக்குழுக்களாகும்.
வணிகவியல், மேலாண்மை, கணினி அறிவியல், கல்வி அறிவியல், மனிதநேயம், மொழியியல், வாழ்க்கை அறிவியல், இயற்பியல் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பரந்த அளவிலான பாடங்களை உள்ளடக்கிய 7 பள்ளிகள் மற்றும் 20 துறைகள் பல்கலைக்கழகத்தில் உள்ளன. [3]
பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வு மூலம் பல்வேறு இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கு மாணவர்களைப் பல்கலைக்கழகம் சேர்க்கிறது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.[4]
2017 ஆம் ஆண்டில், பல்கலைக்கழகம் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் இரண்டு உதவிப் பேராசிரியர்களை பணிநீக்கம் செய்தது, இது பல்கலைக்கழக மாணவர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. [5] சூன் 2018 இல், பல்கலைக்கழகம் கட்டணத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பைத் தொடங்கினர். [6] அந்த மாதத்தின் பிற்பகுதியில், பேராசிரியர் ஒருவருக்கு பல்கலைக்கழகம் விளக்க அறிக்கை வழங்கியதை அடுத்து, ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். [7]
ஆகஸ்ட் 2018 இல், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயை முகநூல் பதிவில் விமர்சித்ததற்காக, பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான சஞ்சய் குமார், பாஜக/ஆர்எஸ்எஸ் தலைமையிலான குண்டர்களால் தாக்கப்பட்டார். [8] இதனால் பல்கலைக்கழகம் 15 நாட்களுக்கு மூடப்பட்டது. [9][10]