மகானந்தா வனவிலங்கு சரணாலயம்

மகானந்தா வனவிலங்கு சரணாலயம்
Map showing the location of மகானந்தா வனவிலங்கு சரணாலயம்
Map showing the location of மகானந்தா வனவிலங்கு சரணாலயம்
மேற்கு வங்காளத்தில் அமைவிடம்
அமைவிடம்டார்ஜிலிங், மேற்கு வங்காளம், இந்தியா
அருகாமை நகரம்சிலிகுரி
ஆள்கூறுகள்26°28′52″N 88°15′50″E / 26.481°N 88.264°E / 26.481; 88.264
பரப்பளவு158 km2 (61 sq mi)
நிறுவப்பட்டது1976
நிருவாக அமைப்புஇந்திய அரசு, மேற்கு வங்காள அரசு

மகானந்தா வனவிலங்கு சரணாலயம் (Mahananda Wildlife Sanctuary) என்பது இமயமலையின் அடிவாரத்தில், இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் டீஸ்டா மற்றும் மகானந்தா ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இது டார்ஜிலிங் வனவிலங்குப் பிரிவின் கீழ் வருகிறது. சிலிகுரியிலிருந்து 30 நிமிடங்களில் இவ்விடத்தை அடையலாம். சரணாலயத்தின் நுழைவாயிலான சுக்னா சிலிகுரியிலிருந்து 13 கி.மீ தொலைவிலும் பாக்தோக்ரா விமான நிலையத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் உள்ளது. இந்த சரணாலயம் 159 கி.மீ 2 பாதுகாக்கப்பட்ட காடுகளில் பரவியுள்ளது. மேலும், 1955 ஆம் ஆண்டில் விளையாட்டு சரணாலயமாக தொடங்கப்பட்டது.1959 ஆம் ஆண்டில், அழிந்துபோகும் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருந்த இந்தியக் காட்டெருது மற்றும் வங்காளப் புலிகளைப் பாதுகாக்க இது ஒரு சரணாலயத்தின் நிலையைப் பெற்றது.[1]

பறவைகள்

[தொகு]

இந்த வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள பறவைகளில் இருவாச்சி, மலை இருவாட்சி போன்ற ஆபத்தான சில உயிரினங்களை உள்ளடக்கியது. மற்றவர்கள் மத்தியில் தகைவிலான் குருவி, உழவாரன், அமெரிக்க பாடும் பறவை, வாயாடி, பாடும்பறவை, மின்சிட்டுகள், மற்றும் தேன்சிட்டு போன்றவைகளை மிகுதியாக காணலாம்.

விலங்குகள்

[தொகு]

இமயமலை செரோ, இமயமலை முள்ளம்பன்றி, இமயமலை கருப்பு கரடி போன்ற சில கவர்ச்சியான பாலூட்டிகளும் கரடிப் பூனை, படைச்சிறுத்தை போன்ற அரிதான விலங்குகளும் காணப்படுகின்றன. இந்திய யானை, இந்தியக் காட்டெருது, புள்ளிமான், கேளையாடு, கடமான், செம்முகக் குரங்கு, மீன்பிடிப் பூனை மற்றும் காட்டுப் பூனை, சிறுத்தை போன்ற பல பூனை இனங்களும் அடங்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. WBFD, West Bengal Forest Department.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mahananda Wildlife Sanctuary
என்பதில் ஊடகங்கள் உள்ளன.