மகான் தளம் | |
---|---|
தலைவர் | கேசவ் தேவ் மவுரியா |
நிறுவனர் | கேசவ் தேவ் மவுரியா |
தலைமையகம் | பிரிவு-30, பரிதாபாது, அரியானா |
கூட்டணி | சமாஜ்வாதி கட்சி (2020-முதல்) |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (உத்தரப் பிரதேச சட்டமன்றம்) | 0 / 403 |
இணையதளம் | |
www.mahandal.com | |
இந்தியா அரசியல் |
மகான் தளம் (Mahan Dal)(மொழிபெயர்ப்பு : பெரிய கட்சி) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் கேசவ் தேவ் மவுரியாவால் நிறுவப்பட்ட இந்திய அரசியல் கட்சியாகும்.
11 மார்ச் 2014 அன்று ராஷ்ட்ரிய பரிவர்தன் தளத்தின் தலைவர் டி. பி. யாதவ் உடனான செய்தியாளர் கூட்டுக் கூட்டத்தில் மௌரியா, "எங்கள் கட்சிக்கு எந்த சித்தாந்தமும் இல்லை. . . நமது சமூகத்தின் நலனுக்காக அதிகாரத்தை கைப்பற்றுவதே எங்களது முக்கிய நோக்கம். . . எல்லோரும் அப்படிச் செய்கிறார்கள் ஆனால் நான் அதை வெளிப்படையாகச் சொல்கிறேன்”.[1] என்றும் "மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நிலை இவரது கட்சிக்கு இல்லை" என்றும், "ஆர். பி. டி. உடனான கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும்" என்றும் மௌரியா கூறினார்.
மகான் தளம் இந்தியத் தேசிய காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்தது. மேற்கு உத்தரப் பிரதேசம் மகான் தளம் மூன்று மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டது. இவை, பாதாவுன், நாகினா மற்றும் ஏட்டா.[2] இராஷ்டிரிய லோக் தளம் காங்கிரசுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி எட்டு தொகுதிகளில் போட்டியிட்டது.[3]
மகான் தளம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான குறிப்பாக மேற்கு உ. பி. பகுதிகளில் வாழும் சாயக்குகள், மவுரியாக்கள், மற்றும் குசவாகக்கள் ஆதரவினைப் பெற்றதாகக் கூறப்பட்டது.[4] ஆனால் மகான் தளம் வேட்பாளர்கள் போட்டியிட்ட மூன்று இடங்களையும் இழந்தது.
இத்தேர்தலில் அனைவரையும் சமமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலைக் கட்சி பின்பற்றும் என்று காங்கிரஸ் தலைவர் கூறினார். பிரியங்கா காந்தி மகான் தளத்துடன் கூட்டணிக் கட்சியாக 'முழு வலிமையுடன்' போராடும் என்று தெரிவித்தார்.[5]
தற்பொழுது நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலில் மகான் தளம், சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்றது.[6]
{{cite web}}
: CS1 maint: url-status (link)