மகாபரிநிர்வான் விரைவு வண்டி |
---|
மகாபரிநிர்வான் விரைவு வண்டி (Mahaparinirvan Express), இந்திய இரயில்வே மற்றும் ஐ ஆர் சி டி சியால் பௌத்த புனிதத் தலங்களுக்கு 28 மார்ச் 2007 முதல் இயக்கப்படும் சுற்றுலாச் சொகுசு விரைவுத் தொடருந்து ஆகும்.[1] இந்த இரயில் சுற்றுலாவில் கௌதம புத்தர் பிறந்த இடம் முதல் பரிநிர்வாணம் அடைந்த இடங்கள் வரை சுற்றி காண்பிக்கப்படுகிறது.
வட இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள பௌத்த புனிதத் தலங்களை காண்பதற்கு இந்த இரயில் பயணம் எட்டு பகல் மற்றும் ஏழு இரவுகள் கொண்டது.[2] ராசதானி விரைவுவண்டி போன்று இந்த இரயிலும் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளை மட்டும் கொண்டுள்ளது. தில்லி சப்தர் ஜங் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, பௌத்த தலங்களை பார்த்து விட்டு மீண்டும் சப்தர்ஜங் இரயில் நிலையத்திற்கே அடையும் வகையில் பயண நிரல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பயணச் செலவு நபர் ஒருவருக்கு ரூபாய் 62,800 (945 டாலர்) முதல் ரூபாய் 76,800 (1155 டாலர்) வரை பயணக் கட்டணமாகும். செலவாகும்.[3]
கௌதம புத்தர் தொடர் முக்கிய நான்கு புனிதத் தலங்களுக்கு மகாபரிநிர்வான் விரைவு வண்டி பௌத்தர்களை அழைத்துச் செல்கிறது. தங்குமிடம், உணவு வசதிகள் வழங்கப்படுகிறது.