மகாபாரதம் | |
---|---|
![]() மகாபாரதம் தொடரின் சுவரொட்டி | |
வேறு பெயர் | மகாபாரதம் |
வகை | தொன்மவியல் |
உருவாக்கம் | சித்தார்த் குமார் திவாரி |
மூலம் | மகாபாரதம் |
எழுத்து | ஷர்மின் ஜோசப் ராதிகா ஆனந்த் ஆனந்த் வர்தன் மிகிர் புத்தா சித்தார்த் குமார் திவாரி |
இயக்கம் | சித்தார்த் ஆனந்த் அமர்பிரீத் ஜி எஸ் சவ்டா கமல் மோகா லோக்நாத் பான்டே |
நடிப்பு | செளரப் ராஜ் ஜெயின் ஷஹீர் ஷேக் பூஜா ஷர்மா அகம் ஷர்மா |
முகப்பு இசை | இஸ்மாயில் தர்பார் |
முகப்பிசை | "அகிலம் போற்றும் பாரதம்" |
பின்னணி இசை | அஜய்-அட்டுள் இஸ்மாயில் தர்பார் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி மொழிமாற்றம் தமிழ் மலையாளம் பெங்காலி தெலுங்கு |
அத்தியாயங்கள் | 267 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | சித்தார்த் குமார் திவாரி காயத்ரி கில் திவாரி ராகுல் குமார் திவாரி |
ஓட்டம் | 30 நிமிடங்கள் (விளம்பர இடைவேளையுடன்) |
தயாரிப்பு நிறுவனங்கள் | ஸ்வஸ்திக் பிக்சர்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஸ்டார் பிளஸ் (இந்தி) விஜய் தொலைக்காட்சி (தமிழ்) |
படவடிவம் | 576i (SDTV) 1080i (HDTV) |
ஒளிபரப்பான காலம் | 22 செப்டம்பர் 2013 16 ஆகத்து 2014 | –
வெளியிணைப்புகள் | |
Official Website | |
தயாரிப்பு இணையதளம் |
மகாபாரதம் என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 7, 2013 முதல் ஒளிபரப்பான ஒரு புராண தொன்மவியல் காவியத்தொடர் ஆகும். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது. இக்காவியம் 100 கோடி பொருள் செலவில் எடுக்கப்பட முதல் இந்திய தொடர் ஆகும்.[1] இந்த தொடருக்கு வி. பாலகிருஷ்ணன் வசனம் எழுத, பாடலாசிரியர் ருக்மணி ரமணி பாடல் எழுதியுள்ளார்.
இந்த தொடர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மகாபாரத்' என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடர் செப்டம்பர் 22, 2013 முதல் ஆகத்து 16, 2014 வரை ஒளிபரப்பாகி 267 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
தொடரை செவன்த் சேனல் சமஸ்கிருதம் கலந்த தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளது. இந்த தொடர் இந்திய மொழிகள் ஆனா தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி, மற்றும் வங்காள மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் இந்தோனேசிய மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரின் வசனங்கள் முழுக்க முழுக்க தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை என்றும், தமிழ் மொழிபெயர்ப்பில் சமஸ்கிருத வார்த்தைகளே நிறைந்துள்ளன என்று விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.[மேற்கோள் தேவை]