மகாராஜா வளபிரபு Maharaja Walaprabhu Śri Maharaja Walaprabhu | |
---|---|
Sri Maharaja Sri Walaprabhu | |
ஆட்சிக்காலம் | 1079-1088 |
முன்னையவர் | அனாக் உங்குஸ் |
பின்னையவர் | இலட்சுமிதர விஜயதுங்கதேவி |
பிறப்பு | பாலி இராச்சியம் |
இறப்பு | 1077 |
மரபு | வருமதேவா அரச மரபு |
தந்தை | உதயனா வருமதேவன் |
தாய் | குணப்பிரியா தருமபத்தினி |
மதம் | வைணவ சமயம் |
மகாராஜா வளபிரபு (ஆங்கிலம்: Maharaja Walaprabhu; இந்தோனேசியம்: Sri Maharaja Sri Walaprabhu) என்பவர் பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழி அரசர் ஆவார். மேலும் இவர் பாலி இராச்சியத்தின் 13-ஆவது அரசராகவும் ஆட்சி செய்தார்.[1][2]
இவரின் ஆட்சிக்காலம் கிபி 1079-1088.[3] இவர் பாலினிய அரசர் உதயனா வருமதேவன் மற்றும் பாலினிய அரசி குணப்பிரியா தருமபத்தினி ஆகியோரின் மூன்றாவது மகன் ஆவார். அவர் முந்தைய அரசரான அனாக் உங்குஸ் என்பவருக்குப் பின்னர் அரியணை ஏறினார்.[4]
இவருக்கு செரி மகாராஜா செரி வாளபிரபு என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதைப்பற்றி பாபகான் II கல்வெட்டு (எண் 501) (Babahan II inscription), அபாபி ஏ கல்வெட்டு (எண் 447) (Ababi A inscription); மற்றும் கிளாண்டிஸ் கல்வெட்டு (எண் 448) (Klandis inscription) (1954a:26; 1965:33) ஆகியவற்றில் பொறிக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் வாளபிரபு மன்னரால் வெளியிடப்பட்டன.
அரசி செரி விஜய மகாதேவிக்குப் பிறகு மகாராஜா என்ற பட்டத்தை இரண்டாவது முறையாகப் பயன்படுத்தியவர் இந்த மன்னர் ஆவார்.[5]