மகாவீர் சிங் போகாட் (2016) | |
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியா |
பிறப்பு | அரியானா |
வசிப்பிடம் | பலாலி, சார்க்கி தாத்ரி மாவட்டம், அரியானா [1] |
துணைவர்(கள்) | தயா கவுர்[2] |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | மற்போர் |
தற்போதி பயிற்றுவிப்பது | கீதா போகாட், பபிதா குமாரி, ரீத்து போகாட், வினேசு போகாட், பிரியங்கா போகாட் |
மகாவீர் சிங் போகாட் (Mahavir Singh Phogat) பாேகத் சகோதரிகளுக்கு தந்தை மற்றும் பயிற்சியாளர்.[3] இவருடைய வாழ்வை மையமாகக் கொண்டு ஆமிர் கான் நடித்த தங்கல் என்ற திரைப்படம் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு, வெற்றிகரமாக ஓடியது.[4] இந்திய அரசாங்கத்தால் இவருக்கு துரோணாச்சாரியார் விருது வழங்கப்பட்டது.[5] இவர் மல்யுத்த வீராங்கனைகள் கீதா போகத் மற்றும் பபிதா குமாரியின் தந்தை மற்றும் பயிற்சியாளர்.[6][7][8]
இவர் ஹரியானவிலுள்ள பிவினி மாவட்டத்தில் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தார். இவர் தயா சோபா கர்ரை மணந்தார். இவருக்கு 4 மகள்கள் கீதா, பபிதா, ரீட்டு மற்றும் சங்கீதா உள்ளனர். இவர்கள் நால்வரும் மல்யுத்த வீராங்கனைகள்.
இவரது வாழ்வை மையமாகக் கொண்டு ஆமிர் கான் நடித்த தங்கல் என்ற திரைப்படம் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு, வெற்றிகரமாக ஓடியது.[9][10][11][12]
மகாவீர் சிங் போகத்தின் வரலாறு, ”அகடா” என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. விளையாட்டு இதழாளர் சௌரப் டுகால் என்பவால் இப்புத்தகம் எழுதப்பட்டு, 21 டிசம்பர் 2016 இல், சண்டிகர் பிரஸ் கிளப்பில் வெளியிடப்பட்டது.