![]() | |
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1945 |
நிறுவனர்(கள்) | |
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுதும் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | குழுமம் |
உற்பத்திகள் |
|
வருமானம் | ▲ $20.7 பில்லியன் (2018)[1] |
பணியாளர் | 240,000 (2018)[2] |
உள்ளடக்கிய மாவட்டங்கள் |
|
இணையத்தளம் | www |
மகேந்திரா குழுமம் (Mahindra Group) என்பது மகாராட்டிராவின் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனம் ஆகும். இது உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. இந்தக் குழுமம் விண்வெளி, வேளாண் வணிகம், சந்தைக்குப்பிறகான வர்த்தகம், வாகன உற்பத்தி, வாகன் உதிரி பாகங்கள், கட்டுமான உபகரணங்கள், பாதுகாப்பு, எரிசக்தி, பண்ணை உபகரணங்கள், நிதி மற்றும் காப்பீடு, தொழில்துறை உபகரணங்கள், தகவல் தொழில்நுட்பம், ஓய்வு மற்றும் விருந்தோம்பல், தளவாடங்கள், அசையாச் சொத்து வணிகம், சில்லறை விற்பனை, பயன்பாட்டு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் உழவு இயந்திரங்களில் சந்தைத் தலைமையுடன் இது மிகவும் புகழ்பெற்ற இந்திய தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது [3] .
மகிந்திரா அண்டு மகிந்திரா 1945 ஆம் ஆண்டில் முகம்மது அண்டு மகிந்திராவாக சகோதரர்கள் ஜே. சி. மகிந்திரா, கே. சி. மகிந்திரா மற்றும் பஞ்சாபின் லூதியானாவில் மாலிக் குலாம் முகமது ஆகியோரால் எஃகு வர்த்தகம் செய்ய இணைக்கப்பட்டது. 1947 இல் இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து, மாலிக் குலாம் முகமது நிறுவனத்தை விட்டு வெளியேறி பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் புதிய மாநிலத்தின் முதல் நிதி மந்திரி ஆனார் (பின்னர் 1951 இல் மூன்றாவது தலைமை ஆளுநர்). 1948 ஆம் ஆண்டில், கே.சி.மகிந்திரா நிறுவனத்தின் பெயரை மகிந்திரா அண்டு மகிந்திரா என்று மாற்றினார்.
எஃகு துறையில் தங்கள் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொண்ட மகிந்திரா சகோதரர்கள் இங்கிலாந்து வணிகர்களுடன் எஃகு வர்த்தகம் செய்யத் தொடங்கினர். அவர்கள் இந்தியாவில் வில்லிஸ் ஜீப் வாகனததைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தையும் பெற்றனர். மேலும், 1947 இல் அவற்றைத் தயாரிக்கத் தொடங்கினர். 1956 வாக்கில், நிறுவனம் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. 1969 வாக்கில் நிறுவனம் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் ஏற்றுமதியாளராக உலக சந்தையில் நுழைந்தது.[4] பல இந்திய நிறுவனங்களைப் போலவே, மகிந்திராவும் லைசென்சு இராச்சியக் கட்டுப்பாடுகள் மூலம் பிற தொழில்களில் விரிவடைந்தது. மகிந்திரா 1982 இல் ஒரு உழவு இயந்திரப் பிரிவையும் 1986 இல் ஒரு தொழில்நுட்ப பிரிவையும் (இப்போது மகிந்திரா தொழில்நுட்பம் ) உருவாக்கியது. கூட்டு முயற்சிகளாலும், கிரீன்ஃபீல்ட் முதலீடுகள் மூலமும் அதன் செயல்பாடுகளை பன்முகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
1994 வாக்கில், குழு மிகவும் மாறுபட்டது. அது ஒரு அடிப்படை மறுசீரமைப்பை மேற்கொண்டது. ஆறு மூலோபாய வணிக அலகுகளாகப் பிரித்தது: தானியங்கி ; பண்ணை உபகரணங்கள் ; உட்கட்டமைப்பு ; வர்த்தக மற்றும் நிதிச் சேவைகள் ; தகவல் தொழில்நுட்பம் ; மற்றும் தானியங்கி கூறுகள் (உள்நாட்டில் சிஸ்டெக் என அழைக்கப்படுகிறது).[5] புதிய நிர்வாக இயக்குநராக ஆனந்த் மகிந்திரா, 2000 ஆம் ஆண்டில் ஒரு புதிய சின்னத்துடன் இந்த மறுசீரமைப்பையும், 2002 ஆம் ஆண்டில் மகிந்திரா இசுகார்பியோவை (முழுமையாக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட வாகனம்) வெற்றிகரமாக அறிமுகப்படுத்தினார். உற்பத்தி மற்றும் உற்பத்தி முறைகளில் மாற்றியமைப்பதன் மூலம், இந்த மாற்றங்கள் நிறுவனத்தை மிகவும் போட்டித்தன்மையடையச் செய்ய உதவியது,[6] அதன் பின்னர் குழுவின் நற்பெயரும், வருவாயும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன. தற்போது, இந் நிறுவனம் இந்தியாவின் 20 பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும் [7] 2009 ஆம் ஆண்டில், போர்ப்ஸ் இதழ் உலகின் சிறந்த 200 நிறுவனங்களில் இதனை தரவரிசைப்படுத்தியது.[8]