மகிழ் திருமேனி

மகிழ் திருமேனி
பிறப்பு9 அக்டோபர் 1978 (1978-10-09) (அகவை 46)
தேசியம்இந்தியர்
பணிஇயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
வாழ்க்கைத்
துணை
ஆன் ரோசன்னா பெர்னான்டோ (திருமணம் 2021 - தற்போது வரை)

மகிழ் திருமேனி (Magizh Thirumeni) தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றிய ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இயக்குனர்கள் செல்வராகவன், கௌதம் மேனன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த பிறகு இவர் தடையறத் தாக்க (2012), மீகாமன் (2014), தடம் (2019) உட்பட நான்கு தமிழ் படங்களை இயக்கியுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இளைஞனாக, மகிழ் திருமேனி, தமிழ் மற்றும் உருசிய இலக்கியத்தின் தீவிர வாசகராக இருந்தார். மேலும் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதினார்.[1] 2000களின் முற்பகுதியில், இயக்குநராக திரைப்படத் துறையில் முன்னேற்றமடைய விரும்பிய இவர், பி. வாசு, டி. ராஜேந்தர் உள்ளிட்ட இயக்குநர்களுடன் சேர விரும்பினார். இயக்குநர் கஸ்தூரி ராஜா தனது மகன் செல்வராகவனின் முதல் படத்தில் பணிபுரிய இவரை ஒப்பந்தம் செய்தார். ஆனால் அந்தப் படம் தாமதமானதால் இவர் முதலில் துள்ளுவதோ இளமை (2002) திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் கௌதம் மேனனிடம் காக்க காக்க (2003) படத்தில் இணைந்து பணியாற்றினார்.[1] பின்னர், இவருடன் பச்சைக்கிளி முத்துச்சரம் (2007), வேட்டையாடு விளையாடு (2006) படத்திலும் இணைந்து பணியாற்றினார்.

இயக்குநர்

[தொகு]

2010 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவைத் திரைப்படமான முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரது இரண்டாவது படம், அருண் விஜய் நடித்த அதிரடித் திரைப்படமான தடையறத் தாக்க (2012), சூன் 2012 இல் வெளியிடப்பட்டது.[2] பின்னர் நடிகர் ஆர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, "மீகாமன்" (2014) என்ற படத்தை இயக்கினார். இது திசம்பர் 2014 இல் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[3] 2019இல் வெளியிடப்பட்ட இவரது அடுத்த படமான "தடம்" இதேபோன்ற நேர்மறையான விமர்சனத்தையும் பெற்று, வணிக வெற்றியாகவும் இருந்தது.

திரைப்படவியல்

[தொகு]

இயக்குநராக

[தொகு]
ஆண்டு படம் தயாரிப்பு நிறுவனம் குறிப்புகள் மேற்கோள்
2010 முன்தினம் பார்த்தேனே செவந்த் சேனல் கம்யுனிகேசன்ஸ் இயக்குநராக அறிமுகம்
2012 தடையறத் தாக்க பெதர் டச் என்டர்டெயின்மென்ட்
2014 மீகாமன் (திரைப்படம்) நேமிசந்த் ஜபக்
2019 தடம் (திரைப்படம்) ரெதான் சினிமாஸ்
2021 கலகத் தலைவன் ரெட் ஜெயணட் மூவிஸ் பின் தயாரிப்பு பணியில் [4]

நடிகராக

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2021 டெடி மரு. வரதராஜன் நடிகராக அறிமுகம்
2021 யாதும் ஊரே யாவரும் கேளிர் dagger அறிவிக்கப்படும் படப்பிடிப்பில்

குரல் கலைஞராக

[தொகு]
ஆண்டு படம் நடிகர் இயக்குநர் மொழி
2018 இமைக்கா நொடிகள் (திரைப்படம்) அனுராக் காஷ்யப் ஆர். அஜய் ஞானமுத்து தமிழ்


ஒளிப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Ramesh, Deepika (2014-12-25). "Magilzh Thirumeni Interview: The Insider". Silverscreen.in (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-05-08. பார்க்கப்பட்ட நாள் 2019-05-08.
  2. V. Lakshmi (2012-06-16). "Magizh's on a mission". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2012-07-24.
  3. "Magizh Thirumeni - Interview". www.behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-08.
  4. "Udhayanidhi Stalin's film with Magizh Thirumeni starts rolling - Times of India ►". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-18.

வெளி இணைப்புகள்

[தொகு]