மகுனி சரண் தாசு | |
---|---|
பிறப்பு | இரகுராஜ்பூர், பூரி மாவட்டம், ஒடிசா, இந்தியா |
இறப்பு | 5 திசம்பர் 2008 இரகுராஜ்பூர், பூரி மாவட்டம், ஒடிசா, இந்தியா |
பணி | பாரம்பரிய நடனக் கலைஞர் |
அறியப்படுவது | கோட்டிபுவா நடனம் |
விருதுகள் | பத்மசிறீ ஒடிசா சங்கீத நாடக அகாதமி விருது துளசி விருது |
மகுனி சரண் தாசு (Maguni Charan Das) ஒடிசாவின் பாரம்பரிய நடன வடிவமான கோட்டிபுவாவின் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார்.
இவர், தசபுஜா கோதிபுவா ஒடிசி நிருத்ய பரிசத் என்ற கோட்டிபுவா நடனப் பள்ளியின் நிறுவனர் ஆவார். அங்கு கலை வடிவம் பாரம்பரிய குருகுல முறையில் கற்பிக்கப்படுகிறது. [1] இந்திய மாநிலமான ஒடிசாவின் பூரி மாவட்டத்திலுள்ள இரகுராஜ்பூரில் பிறந்த இவர், ஒடிசியின் பாரம்பரிய நடன வடிவத்தின் முன்னோடியாக பரவலாகக் கருதப்படும் கோட்டிபுவா பாரம்பரியத்தின் மறுமலர்ச்சிக்கு பங்களித்ததாக அறியப்படுகிறது.[1] இவரது நடண பாணி கோட்டிபுவாவின் இரகுராஜ்பூர் கரானா என்று அறியப்படுகிறது [2] மேலும் இவரது பள்ளி மாணவர்களின் கல்விக் கல்வியை கவனித்துக்கொள்வதன் மூலம் நடனத் துறையில் பயிற்சி அளிக்கிறது. இவர் ஒடிசா சங்கீத நாடக அகாதமி விருது மற்றும் துளசி விருது பெற்றவர். [1] கோதிபுவா நடனத்திற்கான இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசாங்கம் 2004-ஆம் ஆண்டில் இந்தியக் குடிமக்களின் நான்காவது உயரிய பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கியது.[3]
தாசு 5 திசம்பர் 2008 அன்று இறந்தார். [4]