Mahodand Lake مہوڈنڈ جھیل | |
---|---|
உசோ பள்ளத்தாக்கிலுள்ள மகோதந்த் ஏரி | |
அமைவிடம் | உசோ, சுவாத் மாவட்டம் |
ஆள்கூறுகள் | 35°42′50″N 72°39′01″E / 35.7138°N 72.6502°E |
ஏரி வகை | அல்பைன் ஏரி |
முதன்மை வரத்து | பனிப்பாறை உருகுவதால் உருவாகும் தண்ணீர் |
வடிநில நாடுகள் | பாக்கித்தான் |
அதிகபட்ச நீளம் | 2 km (1.2 mi) |
அதிகபட்ச அகலம் | 1.2 km (0.75 mi) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 2,865 m (9,400 அடி) |
குடியேற்றங்கள் | கலாம் பள்ளத்தாக்கு |
மகோதந்த் ஏரி ( Mahodand Lake) ( "மீன்களின் ஏரி") என்பது பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் சுவாத் மாவட்டத்திலுள்ள கலாம் பள்ளதாக்கிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் (22 மை) தொலைவில் மேல் உசோ பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு ஏரியாகும்.[1] இந்த ஏரியை நான்கு சக்கர வாகனம் மூலம் அணுகலாம். இங்கு பெரும்பாலும் மீன்பிடித்தலும் படகு சவாரியும் நடைபெறுகிறது.[2]
மகோதந்த் ஏரி இந்து குஃசு மலைகளின் அடிவாரத்திலிருந்து 2,865 மீ (9,400 அடி) உயரத்தில், புல்வெளிகள், மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது.[3] ஏரியின் கரைகள் பைன் மரங்களாலும், மேய்ச்சல் நிலங்களாலும் மூடப்பட்டிருக்கும். கோடை காலத்தில் முகாமிடும் இடமாகவும் இருக்கும். உருகும் பனிப்பாறைகள் மற்றும் இந்து குஷ் மலையின் நீரூற்றுகள் மற்றும் சுவாத் ஆற்றின் முக்கியக் கிளை ஆறான உசு குவாரை உருவாக்குகிறது. [4]
குளிர்காலத்தில், ஏரியானது உறைந்து கடும் பனியால் மூடப்பட்டிருக்கும். கோடைக்காலத்தில், ஏரியின் படுகை அல்பைன் மலர்களால் சூழப்பட்டிருக்கும். இது தவிர, இந்த ஏரி பல்வேறு வகையான பைன் இனங்களால் சூழப்படிருக்கும். இது காட்டுப் பறவைகளுக்கு உறைவிடமாகவும் செயல்படுகிறது. இதேபோல், ஏரியில் ஏராளமான மீன்கள் உள்ளன. அவை மீன்பிடிப்பதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. ஆனால் உரிமம் பெற்ற மீனவர்களுக்கு மட்டுமே மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறது. [5]
பார்வையாளர்கள் ஏரியில் முகாமிட்டு மீன்பிடிக்கின்றனர். தினசரி வருமானத்திற்காக உள்ளூர்வாசிகளால் பெரிய வலைகள் மூலம் நடத்தப்படும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் மீன்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைத்துள்ளன. [6]
மகோதந்த் ஏரி ஒரு சர்வதேச சூழலியல் சுற்றுலா விடுதியாக மாற்ற ரூ. 80 மில்லியன் செலவில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. [7]