மக்கள் அதிகாரம் கட்சி | |
---|---|
சுருக்கக்குறி | JAP (L) |
தலைவர் | பப்பு யாதவ் |
நிறுவனர் | பப்பு யாதவ் |
தொடக்கம் | 9 மே 2015 |
பிரிவு | இராச்டிரிய ஜனதா தளம் |
இணைந்தது | இந்திய தேசிய காங்கிரசு |
தலைமையகம் | பகுதி எண் 05/14, வர்தமான் கத்தா, அர்ஜூன் பவனம், அர்ஜீன் நகர், பூர்ணியா, பீகார்- 854301 |
நிறங்கள் | பச்சை |
இ.தே.ஆ நிலை | பதிவு செய்யப்பட்ட, அங்கிகார்மற்ற கட்சி |
கூட்டணி | சோசலிச மதச்சார்பற்ற கூட்டணி (2015–2020)
முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி (2020–முதல்)[1] |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (பீகார் சட்டப் பேரவை) | 0 / 243 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (பீகார் சட்டமேலவை) | 0 / 75 |
தேர்தல் சின்னம் | |
![]() | |
இந்தியா அரசியல் |
மக்கள் அதிகாரம் கட்சி (Jan Adhikar Party (Loktantrik); ஜன அதிகார் கட்சி) என்பது இந்தியாவின் பீகாரில் செயல்படும் ஓர் அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி இந்திய அரசியல்வாதி பப்பு யாதவ் என்பவரால் மே 2015-இல் உருவாக்கப்பட்டது.
பப்பு யாதவ் மாதேபுரா மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். கட்சி விரோத நடவடிக்கைகள் காரணமாக இராச்டிரிய ஜனதா தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். 2015 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குச் சற்று முன்பு இந்தக் கட்சியினைத் தொடங்கினார். பப்பு யாதவ் நிதிஷ்-லாலு கூட்டணிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். ஆனால் மாநில சட்டப்பேரவையில் எந்தச் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறவில்லை.
2024ஆம் ஆண்டில், பொதுத் தேர்தலுக்கு முன்பு இவர் தனது கட்சியைக் கலைத்துவிட்டு இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரசு கட்சி, தேசிய மக்கள் கட்சி, சமாஜ்வாதி ஜனதா தளம், ஜனநாயக மற்றும் சாம்ராசு சமாஜ் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய முற்போக்கு ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாக மக்கள் அதிகாரம் கட்சி 64 இடங்களில் போட்டியிட்டது.[2][3][4][5][6][7][8][9]
2015 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தக் கட்சியால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. மேலும் தேர்தலில் 1.04% வாக்குகளைப் பெற்றது.[10]
இந்தியத் தேர்தல் ஆணையம் 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் 'கத்தரிக்கோல்' என்ற புதிய சின்னத்தை மக்கள் அதிகாரம் கட்சிக்கு வழங்கியது.[11] இக்கட்சி முற்போக்கு ஜனநாயகக் கூட்டணியின் கீழ் போட்டியிட்டது.[12][13]
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)