பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம் பொலோனைடு | |
பண்புகள் | |
MgPo | |
வாய்ப்பாட்டு எடை | 233.29 கி/மோல் |
தோற்றம் | சாம்பல் நிறம்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மக்னீசியம் பொலோனைடு அல்லது மகனீசியம் பொலோனைடு (Magnesium Polonide) என்பது MgPo என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஒரு வேதிச்சேர்மமாகும். வேதியியல் நிலைப்புத்தன்மை கொண்ட பொலோனியச் சேர்மங்களில் மக்னீசியமும் பொலோனியமும் சேர்ந்து உருவாகின்ற இப்பொலோனைட்டுச் சேர்மமும் ஒன்றாகும்.[2]
மக்னீசியத்தையும் பொலோனியத்தையும் சேர்த்து 300 முதல் 400 °செ வெப்பநிலைக்குச் சூடுபடுத்தி மக்னீசியம் பொலோனைட்டைத் தயாரிக்கலாம்.[1].
நிக்கல், ஆசனிக்கு ஆகிய தனிமங்களைப் பகுதிப்பொருள்களாகக் கொண்டுள்ள நிக்கலைன் அல்லது நிக்கோலைடு எனப்படும் கனிமத்தின் வடிவமைப்பையும் (சாலகம்) a = 434.5 பிமீ மற்றும் c = 707.7 பிமீ என்ற சட்டக அளபுரு மதிப்புகளையும் மக்னீசியம் பொலோனைடு பெற்றுள்ளது.[1][2] சல்பைடு, செலினைடு மற்றும் தெல்லூரைடு போன்ற இதற்கு நேரிணையான மற்றப் பொலோனைடுகள் போல வழக்கமான சமவடிவ மூலகங்களை இச்சேர்மம் கொண்டிருக்கவில்லை. ஆனால், பாதரசப் பொலோனைடு மட்டுமே இதன் பண்புகளுடன் ஒத்திருக்கிறது.[3].
{{cite book}}
: Cite has empty unknown parameter: |1=
(help)