தனிநபர் தகவல் | |
---|---|
இயற் பெயர் | মাহফুজা খাতুন শীলা |
முழு பெயர் | மக்புசா காதுன் |
சுட்டுப் பெயர்(கள்) | சிலா |
தேசியம் | வங்கதேசத்தவர் |
பிறப்பு | 1990 ஜெஸ்சூர் மாவட்டம், வங்காளதேசம்.[1] |
விளையாட்டு | |
விளையாட்டு | நீச்சல் |
நீச்சல்பாணிகள் | இலகு வகை, மார்பாலுந்தும் பாணி |
கல்லூரி அணி | சிட்டகாங் பல்கலைக்கழகம் |
பயிற்றுநர் | பார்க் டீ கன்[2] |
பதக்கத் தகவல்கள் |
மக்புசா காதுன் (Mahfuza Khatun) ஒரு வங்காளதேச நீச்சல் வீரர் . 2016 கவுகாத்தியில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீ & 100 மீ மார்பாலுந்தி நீந்துதல் பிரிவு நீச்சல் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.[4]
இவர் ஜெஸ்ஸோர் மாவட்டம், அபயநகர் மேல்பாக்கத்தில் உள்ள பஞ்சகபோர் கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் அலி அகமது காஜி மற்றும் தாயின் பெயர் கரிமோன் நேசா. இவருக்கு நான்கு உடன்பிறப்புகள் உள்ளனர்.
ஷிசு அகாடமி நீச்சல் போட்டியின் மூலம் 1999 ஆம் ஆண்டில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். இவர் தனது 3 வது வகுப்பில் முதல் பதக்கம் வென்றார்.[5] 2002 ஆம் ஆண்டில் டாக்காவில் நடந்த தேசிய நீச்சல் போட்டியில் 100 மீட்டர் மார்பாலுந்தி நீந்துதல் பிரிவில் முதல் தங்கப் பதக்கம் வென்றார்.
இவர் பங்களாதேஷ் கிரிரா ஷிக்கா ப்ரோதிஷ்டானின் மாணவி ஆவார். 2002 ஆம் ஆண்டில் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் இவர் 2016 ஆம் ஆண்டில் சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு மற்றும் இதழியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை முடித்தார். ஆரம்பத்தில் இவர் 2010 ஆம் ஆண்டில் அன்சார்-விடிபி சேவைக் குழுவில் சேர்ந்தார் [6] ஆனால் வங்கதேசக் கடற்படையில் சேரும் பொருட்டு 2013 ஆம் ஆண்டில் வெளியேறினார்.[7]
மக்புசா காதுனின் விருப்பமான நிகழ்வுகள் 100 மற்றும் 50 மீட்டர் மார்பாலுந்தும் நீச்சு பாணிப் பந்தயங்கள் ஆகும். இவர் தனது முதல் தெற்காசிய விளையாட்டுப் பதக்கத்தை கொழும்பு 2006 இல் 100 மீ மார்புந்து நீச்சலில் பெற்றார் .[8] அந்த விளையாட்டுகளில் 100 மற்றும் 50 மீட்டர் மார்பாலுந்தும் நீச்சலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
மீண்டும் 2010 தெற்காசிய விளையாட்டுக்களில், அவர் 100 மற்றும் 50 மீட்டர் மார்பாலுந்தும் நீச்சலில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார். படிப்படியாக தன்னை மேம்படுத்திக்கொண்டு, மக்புசா 2016 தெற்காசிய விளையாட்டுகளில் 100 மற்றும் 50 மீட்டர் மார்பாலுந்தும் நீச்சல் பிரிவில் தங்கத்தை வென்றார். 50 மீட்டரில், இவர் 2016 ஆம் ஆண்டில் 34.88 வினாடிகளில் நீந்தி தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் முந்தைய சாதனையை முறியடித்தார்.
2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டி துபாயில் நடைபெற்ற 2010 எஃப்ஐஎன்ஏ உலக நீச்சல் வாகையாளர் போட்டி (25 மீ),[9] 2013 பார்சிலோனாவில் நடந்த உலக நீர் விளையாட்டு வாகையாளர் போட்டி [10] கிளாஸ்கோவில் நடைபெற்ற 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் ஆகியவற்றில் வங்கதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
காதுன் மற்றொரு நீச்சல் வீரர் ஷாஜகான் அலியை 18 மார்ச் 2016 அன்று மணந்தார்.[11][12] இவர்கள் சிறிது காலம் சேர்ந்து வாழும் பாங்கில் தங்கள் வாழ்வைத் தொடங்கினர். 2010 ஆம் ஆண்டு தில்லியில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இருந்தபோது தாஜ்மஹாலுக்கு முன்பு ஷாஜகான் அலி தனது காதலை இவரிடம் முன்மொழிந்தார். கதுனும் அலியும் 2002 முதல் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கிறார்கள்.