முதலாம் மக்முத் ஷா | |||||
---|---|---|---|---|---|
குசராத்தின் சுல்தான் | |||||
ஆட்சிக்காலம் | 25 மே 1458 – 26 நவம்பர் 1511 | ||||
முன்னையவர் | தாவூத் ஷா | ||||
பின்னையவர் | இரண்டாம் முசாபர் ஷா | ||||
பிறப்பு | 1445 அகமதாபாது | ||||
இறப்பு | 23 நவம்பர் 1511 அகமதாபாத் | ||||
புதைத்த இடம் | சர்கெஜ் ரோசா, அகமதாபாத் | ||||
துணைவர் | ரூபமஞ்சரி, கிராபாய் | ||||
குழந்தைகளின் பெயர்கள் | கலீல் கான் (இரண்டாம் முசாபர் ஷா), முகமது காலா, அபா கான், அகமது கான் | ||||
| |||||
அரசமரபு | முசாபரித்து வம்சம் | ||||
தந்தை | இரண்டாம் முசாபர் ஷா | ||||
தாய் | பீபி முக்லி | ||||
மதம் | சுன்னி இசுலாம் |
சுல்தான் மக்மூத் பெகடா அல்லது முதலாம் மக்மூத் ஷா (Mahmud Begada or Mahmud Shah I) ( ஆட்சி. 25 மே 1458 – 23 நவம்பர் 1511 ) குசராத்து சுல்தானகத்தின் மிக முக்கியமான சுல்தான் ஆவார்.[1] இளம் வயதிலேயே அரியணையில் அமர்ந்த இவர், பாவாகத் மற்றும் ஜூனாகத் கோட்டைகளை வெற்றிகரமாக போர்களில் கைப்பற்றினார். [2] இது இவருக்கு பெகடா என்ற பெயரைக் கொடுத்தது. சம்பானேரை தலைநகராக நிறுவினார்.
இரண்டாம் குத்புத்தீன் அகமத் ஷாவின் மரணத்திற்குப் பிறகு, பிரபுக்கள் முதலாம் அகமத் ஷாவின் மகனான இவரது மாமா தாவூத் கானை அரியணையில் அமர்த்தினர். ஆனால் அரச குலத்தில் பிறக்காததால் உயர் பதவிகளுக்கு நியமித்து முறையற்ற செயலாகக் கருதப்பட்டது. ஏழு அல்லது இருபத்தேழு நாட்களுக்குள், இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் 1459 இல் இவரது ஒன்றுவிட்ட சகோதரர் பதே கான், முதலாம் மக்மூத் ஷா என்ற பட்டத்துடன் பதின்மூன்று வயதில் அரியணையில் அமர்ந்தார்.[3]